//பல்கலை மேடையில் என் முதல் கவிதை இன்று வாணி விழாவில் 
வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றிகள்....

சபைக்கோர் ஆசி வேண்டி முன்னிலை நிற்கிறேன்
சரஸ்வதி தாய் கண்ணயர்ந்திருக்கும் நேரம்
எட்டு நிமிடம் மட்டுமே சற்று வாட்ட அனுமதி
எட்டு நிமிடம் மட்டுமே கவிதை சொல்லி சற்று வாட்ட அனுமதி
வழமையின் நிமிர்த்தம் ஒரு வேண்டுகோள்
வேறொரு பெயரால் அனுமதியும் கூட 
கருத்துப் பிழை இருப்பின் கடலைகள் வீசாதீர்கள் வீசின்
கவிதை நேரங்கள் காரணமின்றி அதிகரிக்கப்படலாம் 
வேண்டுகோள் முடிந்தாயிற்று இனி விஷயம் அதற்கு வருவோம்

அன்றொருநாள் நடந்ததிது 
வரம் கேட்டு ரதிகள் ஆயிரமாய்ப் போகிறார்கள்
சிலரின் திரை பார்த்து ராமர்கள் திகைப்பாகிப் போகிறார்கள் 
அட்டும் குட்டுமாய் ஆயிரமாய்ப் போகிறார்கள்
இத்தனை மத்தியில் நானும் நுழைந்திட்டன்
பல்கலை கனவுகள் பலமாய் உறவாட

பறவைகள் இத்தனையாம் மொரட்டுவை மர நிழலில்
பட்டமரம் ஒன்று காட்டி நாண்பன் சொன்ன ஜாபகம் 
கோல்பேஸ் பக்கம் போகாத குழந்தைப்பயல்
வெட்டவெளிக் காட்ச்சிகள் கண்டு நீர் வடிக்கிறான்
கோல்பேஸ் பக்கம் போகாத குழந்தைப்பயல்
வெட்டவெளிக் காட்ச்சிகள் கண்டு வாநீர் வடிக்கிறான்
இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே
எண்ணியதும் ஒரு தருணமுண்டு

வாழ்க்கைப் பாதைகளில்
பலதுகள் வந்து கடந்து போகும்
சிலநேரம் சிலதுகள் தேங்கி நிற்கும்
இருபது வருட இளைய தலைவலி போல 
தாண்டியதும் தேங்கியதுமாய் எண்ணிப் பார்க்கிறேன்
வென்றது எதுவோ ஜாபகத்தில் தேம்பியதுதான்

ஒருகாலம் பாடசாலை தெரியாத அழகிய காலம்
பள்ளித்தொல்லையும் இல்லை 
இன்று போல் வல்லித் தொல்லையும் இல்லை
காலம் கடந்தபின் எண்ணிப் பார்க்கிறேன்

எத்தனை நாள் கட்டிலை தூக்கத்தில் கழுவிக் கொடுத்திருப்பேன்
எத்தனை நாள் சோற்றுப் பானைத் தண்ணீர் நானே இறைத்திருப்பேன் 
எத்தனை நாள் அடுத்த வீட்டு அக்காவை கட்டி அணைத்திருப்பேன்
சில நேரம் அவர்களே எனக்கு முத்தமும் தந்திருப்பார்கள் 
அப்பொழுதெல்லாம் என் செய்கைக்கு செல்லமே முத்தே எண்டவர்கள்
இன்று மட்டும் அவை எல்லாம் தவிர்ப்பதுதான் ஏனோ....
கள்ளமில்லா நெஞ்சுக்கு இன்னும் விளங்கவில்லை சரி
பிஞ்சு வயது ஜாபகங்கள் இது அது கடக்கட்டும்
கொஞ்சம் இனி அஞ்சு வயது ஜாபகங்கள்


முன்பள்ளி வகுப்பிலே அங்கு ஓர் தோழி
அப்பொழுதெல்லாம் தெரியாத்தனமாய் நானும் 
முன்வரிசை ராஜாவானேன்
குட்டு பாய் நீ எண்டு சொல்லி அடிக்கடி எண்ணத் தட்டி கொடுத்துக் கொள்வாள்
சுட்டி வயதில் கைபிடித்து நட்பாக திரிந்த நினைவுகள் இன்னும் நெஞ்சில் வரும்
மொட்டு மலர்ந்து பூவாகி காலம் பல கடந்த பின் பாதையில் ஒருநாள்
குட்டு பாய் எண்டவள் முகம் திருப்பிச் செல்கிறாள்
அப்பொழுது போல் இல்லை இப்பொழுது அவள்
மனம் தேத்திக் கொண்டேன் .

குட்டு இழந்தாயிற்று இனி கொஞ்சம் எட்டுவயது ஜாபகங்கள்
யாழ்கடந்து கொழும்பிலே புதிதாய் வசித்த ஜாபகங்கள்
கோல்பேஸ் எல்லாம் அவ்வளவாய் தெரியாது
வெள்ளவத்தைக் கடற்கரை தான்
சிறுபிள்ளை தனே அப்பொழுதும்
கொழும்பு வேறு புதிது 
அப்பா கைபிடித்துப் போன ஜாபகங்கள்
இப்பொழுது போல் இல்லை கடற்கரையில் ஜோடிகள் அன்று
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
எங்கேயாவது ஒன்று
அதுவும் திரை மறைவில்
மறந்துவிட்டேன் கடற்கரை அல்லவா 
திருத்தம் மர மறைவில்

சிலநேரம் உற்றுப் பார்ப்பேன்
என்னப்பா செய்கிறார்கள்
அப்பாவிடம் கேட்டதும் உண்டு
"நீச்சல் கத்துக்க வந்திருக்காங்க போலடா"
இப்படித்தான் பதில் உரைத்தார்
இப்படியா நீச்சல் கற்றுக் கொள்வது
மனம் ஜோசித்தது
அன்றொருநாள் ஜேம்ஸ் போண்ட படத்திலும் இதுதானே வந்தது
அங்கே கடற்கரை இருக்கவில்லையே
ஏதோ ஏமாத்துகிறார் சரி விட்டுவிடுவம்
கேட்பதை விட்டுவிட்டேன் பார்ப்பதை மறக்கவில்லை

எட்டும் கழிந்து வருடம் ஐந்தானது
அத்தனை போயும் இன்னும் விளக்கம் கிடைக்கவில்லை
காலம் கடந்தபின் இண்டேநேத்காபே
அறிவுப்பசிக்கு விடை தேடி ஒருநாள் 
நானும் நண்பனுமாய்
உள்ளே நுழைகையிலே ஒருத்தன் சொன்னான்
பிஞ்சிலே பளுத்ததுகள்
கணக்கின்றி நுழைந்தோம்
ஒருவழியாக விளக்கமும் கிடைத்தாகிற்று
கல்வித்திட்டத்தில் சேர்க்க வேண்டிய விடயங்கள்
பலர் காணமல் மறைத்துக் கற்பிக்கிறார்கள்
ஒலி ஒளித் தொழில்நுட்பத்தோடு 
அறிவுத்தாகம் அதிகரிக்க அடிக்கடி சென்று கற்றுக் கொண்டோம்
சில நேரம் நான் தனிமையிலும் கற்றுக்கொண்டேன் 
இப்படிக் கழிந்தது எனது பதின்மூன்று


இன்னும் இரண்டு போக விட்டு பதினைந்து வந்தது
மறக்கமுடியாத தருணங்கள் அவை
வெள்ளவத்தைத் தெருக்களில் கண்தேடும் தொகைகள் குறைவு
ராமனின் தொண்டன் மட்டும் இருந்திருந்து ஒன்றுரெண்டு கூட வருவான்
கூடவே சீன் போட்டுக் காட்டியும் தருவான்
ஒண்டும் புரியாத பயல்களாய்
இன்று கம்பஸில் lecturesஇல் முழிப்பது போல அன்றும் முழித்திருக்கிறேன்
ஏதோ காலம் செல்லச் செல்ல மேதுமேதுவாய்க் கற்றுக் கொண்டேன்
இப்படிக் கழிந்தது அழகிய பதினைந்து

பதினெட்டில் பொதுவாய் என்று சொல்வதட்க்கில்லை
முற்றும் கற்ற மாமுனிகளாய் நம்மைப் போல் எத்தனையோ கூட்டணிகள்
நண்பனின் காதலுக்காய் கூடச் சுற்றிய நினைவுகள் மட்டும்
நெஞ்சிலே அடிக்கடி அசைந்து போகும்
அருத்துசா வீதியில் மொத்தம் முன்னூற்று மூன்று வீடுகள்
சந்தேகம் இருந்தால் எண்ணிப் பாருங்கள்

காலங்கள் இப்படி எல்லாம் கடந்தது
நாளேடு எல்லாம் நல்லாய்ப் படித்து முடித்து பல்கலை வந்தோம் 
மேலும் நாலு வருடம் கடந்தபின்
என்ன ஒரு வன்கொடுமை
நம்மில் இருக்கும் சிலர் பற்றி அடுத்த வரிகள் சொல்கிறேன் 
இங்கே வந்து நாளேட்டுக்கு விளக்கம் கேட்கிறான் ஒருவன்
நமீதா யாரென்கிறான் இன்னொருவன்
நாலைந்து கோர்ஸ் முடித்து நல்லா வந்திருக்கிறாயா என்றால்
ஐந்தாவதாய் ஜாவா கோர்ஸ் படிக்கிறேன் என்கிறான் மற்றுமொருவன்
கருவறை முதல் அல்லல்ப்பட்டு அவதிப்பட்டு நான் கற்றவைகள் எல்லாம் என்னாயிற்று
இங்கே பயன்படாமல் போய்விடுமோ
கவலைப்பட்டு கடற்கரை அழைத்துச் சென்றால் கண்ணை மூடிக் கொள்கிறான் இன்னொருவன்

யாரிளைத்த குற்றம் இது
சமூகத்தின் பால் பிரல்பட்ட நினைவைக் கொண்டுவிட்டு நம்மைக் குற்றம் சொல்கிறார்கள்
திரைப்படத்தில் நீல ஆடை அணிந்த கதாநாயகி கண்டால் கூட எழுந்து ஓடி விடுகிறார்ககள்
காலங்கள் மாறலாம் சிம்ரன் திரிஷா சமந்தா இளைஜர் தம்  கனவுகளை மாற்றலாம் 
கல்லறை வரை இது போன்ற மனிதர்கள் மாறவே போவதில்லையோ


வேதனையுடன் பொறுமையைக் கவி கேட்டோருக்கு நன்றி சொல்லி 
மீண்டும் வருவேனெண்டு எண்ணத்துடன் விடை பெறுகிறேன் 




இப்படிக்கு
ப்ரியமுடன்
Prakhash

கடந்த சில நாட்கள் எந்தளவுக்கு இருபதுக்கு20 போட்டிகள் எம்மவர் மனதை ஆக்கிரமித்துக் கொண்டதோ அதுக்குச் சமாந்தரமாக தமிழ்த் தேசியம் பற்றியும் விளையாட்டு அரசியல்கள் பற்றியதுமான விடயங்களும் எம்மவர்களை ஆக்கிரமிக்கத் தவறவில்லை..சூடான விவாதங்களும் சுவையான வார்த்தைப் பரிமாற்றங்களும் கணக்கின்றிக் காணப்பட்ட போதும் சில விடயங்கள் ரசிகர்கள் பலரின் மனங்களுக்கு முரண்பாடாகவே அமைந்திருந்தது..அவ்வாறான சில விடயங்களையும் என் நினைவலைகளையும் இங்கே பகிர்கிறேன்...

இலங்கையைப் பொறுத்தவரை சமூகத்தில் பெரும்பான்மையானவர்களிடம் காணப்படும் ஒரு நிலைப்பாடு போட்டிகளில் பெரும்பான்மை சிங்கள மக்கள் இலங்கை அணிக்கும்  தமிழர்களில்  பாதிக்கு மேல் இந்திய அணிக்கும் அதே போல் முஸ்லிம் இனமக்கள் பாகிஸ்தான் அணிக்கும் என்ற ரீதியிலேயே தங்களுடைய ஆதரவை வழங்குகின்றனர் என்று...இது ஒரு வேளை உண்மையாக கூட இருக்கலாம்...ஆனால்  இந்த நிலைப்பாட்டுக்கு கூறும் நொண்டிச் சாக்குகளைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை....தமிழர்களில் இந்திய அணியை ஆதரிப்பவர்கள் கூறும் கருத்து எம் இனப்பிரச்சனை..அதுமட்டுமின்றி இவ்வாறானவர்கள் இலங்கை அணியை நேசிக்கும் எம்மவர்களை இனத் துரோகிகளாகவும் சித்தரிக்க முயல்வதுதான்  கவலைக்குரியது....உண்மையில் சொல்லப் போனால் இனப் என்ற ரீதியில் என்னைப் பொறுத்தவரை இனமென்ற ரீதியில் அரசின் குறிப்பிட்ட ஒரு சமூகம் எமக்கு அநியாயம் இழைத்தது உண்மைதான்...ஆனால் இந்தியாவோ எம்மை இனமாக வஞ்சித்திருக்கிறதே.....எதிரியை வெறுப்பவர்களாயின்  ஏன் துரோகியை தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டும்...இந்த மனதின் நிலைப்பாடுதான் எனக்கு புரியவில்லை...இது சம்பந்தமாக பதியவர் அண்ணா ஒருவர் உரைத்திருந்த கருத்துக்களையும் இங்கே பகிர்கிறேன்...




/*இந்திய ஆதரவு மனப்பான்மை என்பது இந்திரா காந்தி காலத்திலிருந்து ஆரம்பித்திருக்கலாம். அது, தமிழர் போராட்டங்கள் தோற்றம் பெற்ற போதும் ஏதோவொரு ஆதரவு மனப்பான்மையின் வழி ஊடுகடத்தப்பட்டிருக்கிறது. அது, இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு -கிழக்கில் ருத்ர தாண்டவமாடிய போதிலும் அவ்வளவாக மாறவில்லை. அது ஏன் என்று இன்னமும் புரியவில்லை. ராஜிவ் காந்தி காலத்திற்குப் பின்னரும் இந்தியா எங்களை வைத்து ஆயிரம் அரசியல் நாடகங்கள் ஆடிவிட்டது. எங்களின் மூச்சுக்குழாயைப் பிடித்து முள்ளிவாய்க்காலுக்குள் தள்ளுவதற்கு துணை நின்ற போதும் கூட இந்தியாவை “இந்திரா காந்தியின் கால நல்லெண்ணத்துடன்“ அணுகியவர்கள் இங்கு இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் கூறுகின்ற தேசிய வாதத்தை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இலங்கை கிரிக்கட் அணியின் தோல்வியை கொண்டாடுவதற்கு அவர்கள் முன்வைக்கிற தேசியம் பற்றிய புரிதல் மிகவும் சிறுபின்ளைத்தனமானது. இந்திய கிரிக்கட் அணியை கொண்டாடுவதற்கு என்ன காரணத்தை வேண்டுமானாலும் முன்வையுங்கள் அது எனக்கு பிரச்சினையும் இல்லை. ஆனால், ‘தமிழ்த் தேசிய ஆதரவு’ என்கிற மொண்ணைத்தன காரணங்களை அடுக்காதீர்கள். இது, நாங்கள் வேண்டி நிற்கிற கழிவிரக்க மனநிலையில் வெளிப்பாடு மட்டுமே.*/

உண்மையில் இனப்பிரச்சனை குறித்து சிந்தித்து ஒரு அணிக்கு ஆதரவு வழங்குபவர்கலாயின் நிச்சயம் இந்திய அணிக்கு தம ஆதரவை வழங்கக் கூடாது என்பதே என் வாதம்...அடுத்தாதாக இன்னுமொரு விடயம்..இத்தனை ஆண்டுகளாக என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் நாமும் ஒரு சமூகமாக இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இந்நாட்டின் வளங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்....எல்லாவற்றையும் இங்கேயே இருந்து அனுபவித்துவிட்டு இந்த நாட்டுக்காக விளையாடுபவர்களை நேசிப்பவர்களை இனத் துரோகிகளாக சித்தரிக்க முயல்கிறார்கள் என்றால் அவர்கள் நாம் என்ன பெயர்கொண்டு அழைப்பது....ஒரு வேளை உணவிட்டவனைக் கூட வாழ்நாள் முழுதும் நன்றியைப்பர்க்கும் சமூகம் எனப் ஒருகாலம் போற்றப்பட்ட சமூகம் அல்லவா எம் தமிழ்ச் சமூகம்...இன்று நாம் ஏன் இன்று அந்த நன்றி மறந்து நிற்கிறோம் இங்கே....இரு சமூகத்தில் குறிப்பிட்ட சிலர் செய்த தவறுக்காக மொத்தமாக தமிழ்ச் சமூகத்தை இலங்கை நாட்டிலிருந்து வேறொரு பாகமாக பிரித்துக் கையாள முயட்ச்சிப்பதன் உட்கிடக்கைதான் என்ன...அங்கேயும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் எம்மைப்புரிந்து கொண்ட எமக்காக விவாதிப்பவர்கள் ....அவர்களையாவது நாம் நட்பாக பார்க்கிறோமா...

அடுத்ததாக இன்னொரு விடயத்தைப் பார்ப்போம்...சிலர் கூறும் காரணம் திறமையின் நிமிர்த்தம் ஆதரவு அளிக்கிறோம் எண்டு சரி ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணம்...ஆனால் நீங்கள் ஆதரவு அளிக்கும் அணி தவிர்ந்த ஏனைய குழுக்கள் ஏதும் எம் அணியுடன் விளையாடும் போது அந்த அணி வெற்றிபெற வேண்டும் என்று எம் இலங்கை அணியை தாழ்த்தும் விதமாக நடந்து கொள்வது ஏன்....இந்த இடத்தில் துரோகம் இழைப்பது யார்....

உரிமை என்ற ரீதியில் ஆண்டுகள் பல போரடிவிட்டோம் தோற்றும் விட்டோம்...இப்பொழுது இருப்பதெல்லாம் பொதுவான உரிமைகளை பெற்றுக்கொண்டு எம்சமூகத்தை நிலை நிறுத்துவது தான்....இப்பொழுது எங்காவது ஒரு உரிமைக்காக ஒரு போராட்டம் நடைபெறுகின்றது என வைத்துக் கொள்வோம் அங்கே ஆயிரம் சகோதர இன முகங்களுடன் எங்காவது ஒன்று ரெண்டு தமிழ் முகம் காணக்கிடைக்கும்...சில நாட்களின் முன்பு கல்விசார் ஊழியர் போராட்டத்தின் போதும் நான் கண்கூடாக கண்டதொன்று...அங்கே எம் சகோதர இன மக்கள் எமக்காகவும் போராடுகிறார்கள் அவர்களை பெற்றுத்தரப் போகும் உரிமைகளை நாமும் அனுபவிக்கப் போகிறோம்..இதுபற்றி எல்லாம் சிந்திப்பவர்கள் எத்தனை பேர்....இவ்வாறெல்லாம் எம் தேசத்தின் வளங்களையும் அடுத்தவன் பெற்றுத்தரும் உரிமைகளையும் அனுபவித்து விட்டு அதற்கெதிராக நாம் வேறு என்பது போல் நடந்துகொள்வது எவ்விதம் நியாயமாகும் ...எம் பொது உரிமைகளுக்காக வராத பலர் தாம் இங்கே இன உரிமைகளைப் பற்றிக் கதைத்தபடி ஏளனமாக இல்லை...இது பல இடங்களின் கண்கூடு...

நிச்சயாமாக ஒன்று மட்டும் ஏற்றுக்கொள்கிறேன் நாட்டுப்பற்றுக்கும் ஆதரவளித்தளுக்கும் அணிக்கும் சம்பந்தமில்லை தான்....ஆனால் உண்மையாகவே இந்த நாட்டை நேசிப்பவர்கலாயின் சிந்தித்துப் பாருங்கள்..நீங்கள் வேறு ஒரு அணிக்கு ஆதரவு வழங்குகிறீர்கள்..அந்த அணியுடன் எம் அணி விளையாடி ஒரு இக்காட்டன நிலையில் விலாயாடிக்கொண்டிருக்கிறது அப்போது நிச்சயம் உங்கள் மனம் சொல்லும்.."நம்மவர் ஜெயிக்கக் கூடாதா  என்று"....அப்பொழுது நீங்களே உணர்வீர்கள் உங்கள் நாட்டுப்பற்றை...

இது எல்லாம் தவிர வேறு சில எம் பிரச்சனைகள் சம்பத்தமாக ஆதியும் அறியாத  அந்தமும் அறியாத தமிழ்நாட்டிலிருந்துகொண்டு சிலதுகள் அறிக்கைகள் விடும்....இலங்கை தோற்றால் அது இலங்கைத் தமிழர்களின் வெற்றியாம்....மத்திய அரசு தமிழ் நாட்டை இப்பொழுதெல்லாம் கணக்கெடுப்பதே இல்லை...முதலில் நீங்கள் தனியாக வருவதற்கு முயற்சி செய்யுங்கள் அப்புறம் அடுத்தவர்களைத் தூண்டி விடலாம்....தாங்கள் மட்டும் நாட்டுடனே இருக்க வேண்டும் கேட்டால் இந்தியர்கள் அப்பிடீன்னா நாங்க மட்டும் என்ன இளிச்சவாய்களா....இப்படி எல்லாம் பேசிய பிறகும் இதை வாசித்துவிட்டு சிலதுகள் நிச்சயம் நையாண்டி செய்யும் ஏளனப்படுத்தும் அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை....நாமும் உண்மையான தமிழர்கள் தான்...எம் இனத்தை நேசிக்கிறோம்...எம்மால் ஏதாவது செய்ய முடியாமல் போனாலும் ஒவ்வொரு தமிழனின் கவலையின் போதும் எம் கண்களும் நிச்சயம் கலங்குமையா....

#சில மனிதர்களால் சமூகமாய் வஞ்சிக்கப்பட்டலும் என் நாடு எனக்கு தந்தது ஏராளம்.....வஞ்சித்தது மனிதர்களே.....

இப்படிக்கு
ப்ரியமுடன்
S.PRAKHASH....

ஹலோ ப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்பிடி இருக்கீங்க கொஞ்ச நாளா வெட்டியா இருந்தாலும் பிஸியா தானுங்க இருந்தம் அதால தான் ஒண்டும் எழுத முடியல....அப்படா கொஞ்ச நாளா நிம்மதியா இருந்தம் மறுபடி வந்துட்டாண்டா எண்டு நீங்க மனசுக்குள்ள திட்டுறது விளங்குது.....என்ன செய்ய ப்ரெண்ட்ஸ் எதெண்டாலும் வதைக்க வேண்டியது என்ட கடமை...வாங்க வேண்டியது உங்க நிலைமை நம்மளுக்குள்ள ஏன் இந்த போர்மளிட்டி எல்லாம்....ரொம்ப நாளா நானும் ஏதாவது நல்ல விசயங்கள் எழுதுவம் நாமளும் ஏதோ கொஞ்சம் சமூக அக்கறையோட  இருக்கம் எண்டு காட்டிகுவம் எண்டு எழுதினா எல்லாரும் வந்து காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சுறாங்க...அதான்  மறுபடி அத விட்டிட்டு நம்ம ட்ரெண்டுகே எழுதுவம் எண்டு வந்திட்டம்....சரி சரி வாங்க அத விட்டிட்டு விசயத்தக் கவனிப்பம்...


நம்ம பசங்களுக்கெல்லாம் எதுல ஆர்வம் இருக்கோ இல்லையோ இந்த காதல் என்டா ஆர்வம் காட்டதவங்க யாருமே இருக்க முடியாதுங்க..அத பற்றி பேசுறதிளையும் அடிக்கடி பண்றதிலையும் சரி..... நாடோடிகள்ள சசிகுமாரு அண்ணாத்த சொல்லுவரே..."காதல் என்டா  தெரிஞ்சவன் தெரியாதவன் எல்லாம் கைகொடுக்க வருவானெண்டு"....இப்பிடித்தான் நாமளும் ரொம்ப நல்லவங்களாச்சே அதால யாரு வந்து ஹெல்ப்பு எண்டாலும் பண்ணாம விடுறதில்ல....ஷாஜகான் படத்தில வார விஜய் அளவுக்கு இல்லாட்டியும் ஏதோ நம்மளால முடிஞ்சளவு....நம்மளால இந்த அடி உதை  எல்லாம் வாங்க முடியாது பாருங்கோ அதால யாருக்காவது ஹெல்பு பண்ண போறேன்டாலும் அண்ணாத்த யாரவது பொண்ணு சைடில இருக்கங்களா எண்டு முதல பர்த்துகுவம் அதான் நம்ம கெட்டித்தனம்...இப்பிடி எல்லாம் பார்த்துப் பார்த்து ஹெல்ப் பண்ணின என்ன சொல்ல நம்ம ராசிக்கோ என்னவோ நாம ஹெல்ப் பண்ற லவ் ஒண்டு ஒழுங்க முழுசா உருப்படுறல்ல....சரி சரி அது வேற கதை அத விடுவம்..இப்படி ஹெல்ப்பன்ன போய் போய் ஊர் காதல் கதை எல்லாம் நமக்கு அத்துப்படிங்க....இப்ப நான் சொல்ல போறது நம்ம வட்டராத்தில வந்து சிக்கிக் கொண்ட சில காதலன்களை பற்றித தானுங்கோ...

நம்ம இந்த எக்ஸ்பீரியன்சு ஆரம்பிச்சது கிட்டத்தட்ட 10  ஆம் ஆண்டில...அதுக்கு முன்னாடியும் சின்ன சின்னதா இருந்துருக்கு ஆனா இதாங்க பெஸ்டு...அப்பவே ஒருத்தன் என்கூடவே வந்து வாய்ச்சான்...பொல்லாதவன் படத்தில நம்ம தனுசு தன் கதைய திருப்பி திருப்பி சொல்லுவாரே அந்த கொடும எல்லாம் எனக்கு முன்னமே நடந்துருக்கு....இருந்தாலும் மற்ற பசங்க அடிச்சு விரட்டிடுவான்களோ என்னவோ நான் தான் ஒருத்தன் அப்பக்கொப்பயா கிடைச்சுற்றன் போல என்ன உக்கார வைச்சு திணற திணற கதை சொல்லுவான்....பெயர்ல மட்டுமில்ல நண்பனுக்கு எல்லாமே "மகிழ்ச்சி" யாதன் இருந்தது...ஆனா லவ் பண்ணினா அதுட மேயிண்டனன்சு எவ்வளவு கஷ்டமெண்டு அவன்கூட பழகின பிறகு தாங்க எனக்கே புரிஞ்சது...இதுக்காக இதெல்லாம் நீ பண்ணினதே இல்லையா எண்டு கேக்காதீங்கோ நம்ம கதைக்கு அப்புறம் வருவம்....நல்லா தான் போயிட்டு இருந்திச்சு செட்டு ஆகடியும் ஆனா நம்மகிட்ட வந்து சொன்னோன்ன நாமளும் சும்மா இருக்க மாட்டமே ஐடியா என்ட பெயர்ல அள்ளி விட்டம்...நாம மட்டுமில்ல நிறைய பேரு வரைட்டி வரைட்டியா அள்ளிவிட்டங்க ஐடியாவ தான்...சும்மா இருந்த தேர நாம இழுத்து நல்லா தான் தெருவில விட்டம் ஆனா என்ன பண்ண சந்நிதி வரைக்கும் இழுக்கத்தான் முடியாம  வடம் அறுத்துக்கிச்சு......அதுக்கு பிறகு இந்த மட்டேர்ல எல்லாம் தலை போட கூட எண்டு அடக்கிற்று இருப்பனுங்க ஆனா என்னையே வந்து இழுப்பானுங்க....நிறைய விசயத்தில நிறைய நாள் ஹெல்ப் பண்ணாம  நழுவியும் இறுக்கம்....

இப்பிடி தானுங்க ஒ/எல்  காலத்தில  ஒருத்தநெண்டா   /எல்  காலத்துல இன்னொரு பயபுள்ள வந்து சிக்கினான்....அதுக்கு முன்னாடி எல்லாம் அருத்துசா லேன் எண்டு யாரவது அட்ரெஸ் கேட்ட கொஞ்சம் ஜோசிச்சு தாங்க சொல்லுவான் ஆனா அப்புறம் அந்த லேன்ல ஒவ்வொரு செங்கல் செங்கலா  ஜாபகம் வார அளவுக்கு சுத்தனமுங்க....நம்ம பசங்களுக்கு லவ் பண்றப்போ வார தைரியம் அத சொல்றபோது வாறதில்ல பாருங்கோ(அடுத்தவன் லவ் எண்டதால நாமளும் தைரியமா அட்வைசு பண்றம்)....நாம கூட போனா உசுப்பேத்தி உசுப்பேத்தியே பேச அனுப்பிடுவமுங்கோ அதால பயபுள்ள நம்மளையே எவ்வளவு பிஸி எண்டாலும் வீடு வரைக்கும் வந்தும் கூட கூட்டிப் போய் இருக்கான்....இப்பிடியெல்லாம் அளவோட  /எல்  எல்லாம் முடிஞ்சு நான் ரெண்டாம் தடவை  பரீட்சை எடுக்கும் மட்டும் சுத்திற்று இருந்தனுங்க...அதுக்கு பிறகு ரிசல்டு வந்த பிறகு கொஞ்ச சமாச்சரங்களால நான் போறதில்ல அத பற்றி அப்புறம் பேசுவம் அதுக்கு பிறகு அவன்கூட எவன் போனானோ தெரியல.....நல்லா வளந்து  வந்த சேவல் இறச்சிக்கடைக்கு போய்டுச்சுங்க.....நல்ல காலம் இதுல கடைசி வரை நான் இல்லாததால நம்ம தலை ராசி தப்பிச்சுது....

இப்பிடியெல்லாம் ஒண்டு ரெண்டு இல்ல பத்துப்பதினைஞ்சு போயிருக்கும் இப்படியெல்லாம் அடிபட்டு அல்லல்ப்பட்டு அவமானப்பட்டு இங்கயாவது நின்மதியா இருப்பமெண்டு கம்பஸ் வந்து சேர்ந்தா இங்க கதை சொல்றதுக்கேண்டே கூட்டம் கூட்டமா வந்து சேர்ந்தானுங்க பாருங்க....ஹெல்ப்பு கேட்காடியும் நம்ம பயபுள்ளைகளுக்க ப(வ)ல்லி ப(வ)ல்லி எண்டு ஒரு நண்பரு இருக்காருங்க பயபுள்ள செம கெட்டி ப்ரெண்டு என்ட பெயர்ல பொண்ணுங்க கிட்ட  பஸ் ஓட்ரதுக்கு எல்லாம் இவருகிட்ட தான் கத்துக்கணும்....அண்ணாத்த 5 வருசமா ஒரு ஒரு உயிரியல் படிக்கிற புள்ளைய டாவு அடிக்கிரருங்க...1 மாசம் டாவு அடிக்கிரவனே ஒரு நாள் பூரா வைச்சு கதை சொல்லுவான் இது உங்க வீட்டு லவ் எங்க வீட்டு லவ் இல்லங்க கொக்காமொக்கா 5 வருஷ லவ் இல்ல....நேர்ல பத்தாதுண்டு போன் பண்ணி கூட கதை சொல்லி காதுக்கடிச்ச கதைய நான் எங்க போய் சொல்லி அழ...  நான்  ஆனா ஒரு விசயத்தில அவரு ரொம்ப நல்லவருங்க நம்மள பற்றி தெரிஞ்சுருக்கும் போல இருக்கு அதால நம்மக்கிட்ட ஹெல்ப்பு எண்டு ஒண்டும் கேட்கல..அதால நாமளும் அப்பிடியே விட்டிட முடியாது பாருங்க கொஞ்ச நாள்ல இந்த வேலையா யாழ்ப்பாணம் போகலாமெண்டு இருக்கன்...ஆனா நண்பரு ரொம்ப உசாரு அது உசராகாட்டியும் எண்டு பலதுக்கு தண்ட போன்ல இருந்து குறுந்தகவல் போட்டு கொள்வாரு காதல் சமாச்சாரங்கள் பற்றி அப்புறம் அந்த பொண்ணுக  கேட்டா  இளிச்சவாயன் நான் தானே....எப்பவுமே அவர்ட போன் நம்மகிட்ட தான் இருக்குமாம்..அவர் போன்ல இருந்து போடுறது நான்தானாம்..எப்பவாச்சு நானில்லாட்டி அவர் கூடவே பெயர சொல்ல இன்னொரு குழந்தையும் இருக்குதுங்கோ........இன்னும் அந்த குறுந்தகவல்  வாற  ஜீவன்கள் இதையும் நம்புதுகள்...

ஆனா ஒன்டுங்க கம்பசுக்கு வந்து லவ் மாட்டேருகள பார்த்த போது ஒருசந்தோஷம் நாம சேர்த்து வைக்காமலே பலது தானா சேர்ந்துகுரானுங்க தானா உடைந்சுகுரானுங்க..இந்த கால லவ் எல்லாம் இப்பிடி தானம்....நம்ம ராசில மட்டும் இது டிபெண்ட் பண்ணி இல்ல எண்டு இப்ப தானுங்க புரியுது....இப்படி நிறைய இருக்குங்க சொல்றதுக்கு...ப்ரனவக்காதல் பிருந்தாவனக் காதல் எண்டெல்லாம் ஏன் மிகச் சின்னப் பொருள் என்டுவான்களே அதுக்கு ஏதோ அணு எண்டுவாங்க படிச்ச ஜாபகம் இருக்கு  அதுட காதல் கதை எல்லாம் கூட இருக்குங்க ரொம்ப இண்டரஸ்டா இருக்கும் அதெல்லாம் அப்புறம் சொல்லுறன்....கொஞ்சம் வேலை இருக்குங்க நண்பன் போன் பண்றானான் ஏதோ லவ் மாட்டாராம்....அப்ப பிறகு சந்திப்பம் வரட்டே.....

இப்படிக்கு
ப்ரியமுடன்
Prakhash.....


ஏக்கங்கள் எப்போதும் ஒன்றாய் இருந்திருக்கலாம் நோக்கங்கள் எப்போதும் ஒன்றாய் அமைந்தனவா....காலங்கள் கடந்து கனவுகள் மறைந்து போன இன்றைய நிலையிலே என் மனம் அசைபோடும் நிகழ்வுகள் இவை....கடந்த சில வாரங்களில் பத்திரிகைகளில் அதிகமாக இடம்பெற்றிருந்த விடயங்களில் ஒன்று நில சுவீகரிப்பை எதிர்த்து முருகண்டி போன்ற இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு போராட்டங்களும் அவற்றின் பிற் தொடர்ச்சிகளும்.... மேலும்  குடியமர்த்தப்படுவதட்காக வவுனியா முகாம்களில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்கள் மீண்டும் அங்கேயே திருப்பி அனுப்பப்பட்டமையும்......

நினைவுகளில் இருக்கும் வரை யாழ் மண்ணில் வாழ்ந்தது 2  வருடங்கள் தான்....அமைதியற்று இருந்த போதும் ஆனந்தமாய் இருந்த காலங்கள் அவை.....யுத்தத்தின் நிமிர்த்தம் இடம்பெயரல் அவ்வாறே நான் யாழ் மண்ணை விட்டு வந்த அந்த நாட்கள் இன்றும் ஜாபகமாய்.... எமது இடம் சமூகம் சமயம் கலாச்சாரம் அனைத்தையும் அங்கே விட்டு விட்டு இங்கே வந்து வாழ ஆரம்பித்த காலங்களிலும் அதற்கு பின்னாட்களிலும் கூட மண்ணின் நினைவுகள் அடிக்கடி வந்து போகும்... சொந்த வீடு வாசல் எட்டிப்பார்த்தால் வெளியே தெரியும் அழகிய கோவில் எல்லாம் விட்டு எல்லாம் விட்டு இங்கே வந்து வாடகை வீட்டில் கால்களை நீட்டினால் சுவர்முட்டும் அளவுக்கு வாழ்ந்தவர்கள் இன்னும் எமைப் போல் இங்கு நிறையவே உண்டு...ஏறத்தாள இடம்பெயறலின் பின்னலில் ஒரு 12 வருடங்கள் வரை யாழ் மண்  எம் மனதிலும் சரி இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் எம்மவர்களிடமும் சரி கர்வத்துடன் எம் ஊர் என்று சொல்லும் அளவுக்கு  யாழ்ப்பாணம் இருந்து வந்தது உண்மையே.... யுத்தத்தின் கொடுமையிலும் கம்பீரமாய் விளங்கிய யாழின் நிலையில் இன்று இவ்வாறான மாற்றத்துக்கு கரணம் என்ன....

அளவுக்கதிகமாக குவியும் வெளிநாட்டு உறவுகளின் பணமா.....?

ஆரம்ப காலங்களில் யாழை விட்டு இடம்பெயர்ந்து போன தம் உறவுகள் அங்கே படும் கஷ்டத்தை பொறுக்காமல் அவர்கள் தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய வேண்டும் என்ற எண்ணத்தில் அனுப்பிய உதவித் தொகைகள் இன்று எம் மக்களில் பலரை தவறான பாதைகளில் தள்ளிவிட்டிருக்கவே செய்கின்றன....இதன் நிமிர்த்தம் சில வேலைகளில் சிறு பிள்ளைகளிடம் இவ்வாறான பணத்தை பெற்றோர்கள் அளவுக்கதிகமாக புழக்கத்தில் விடுவதும் இளமைப் பராயத்திலேயே எம் சமுதாயத்தை வழிமாற்றி அழைத்துச் செல்லவும் காரணமாய் அமைகின்றன.... எந்தளவுக்கு உண்மை எண்டு தெரியவில்லை அனால் பத்திரிக்கை செய்திகள் மூலமும் இணையத்தின் மூலமும் அறிந்து கொண்ட விடயம் இக்கால யாழில் 18 வயதிலும் குறைந்த சிறார்களில் போதைப் பொருள் பாவிப்பவர்களின் விகிதம் வயது வந்தவர்களை விட அதிகமாம்...  மேலும் ஆபாசப் படங்களின் புழக்கமும் யாழின் சிறுவர் சமூகத்தை சீரழிப்பதில் முக்கிய பங்கு  வகிக்கிறது.... 

வெளிநபர்களின் யாழ் வருகையா....?

யுத்தம் ஓய்ந்த நிலையில் சுற்றுலாத்துறை விருத்தி என்ற நடவடிக்கை யாழிலும் மேட்கொள்ளப்பட்டது அனைவரும் அறிந்ததே... கசோர்னா கடற்கரை கடற்கரை சாலைகள் போன்றனவும் இதற்காக திருத்தியமைக்கப் பட்டிருந்தன....இந்நிலையில் அங்கே வருகை தரும் உள்நாட்டு வெளிநாட்டு பயணிகளின் பங்கும் யாழை நிலைகுலைப்பதில் பெரும் பங்கு ஆற்றுகின்றது... புதிதாய் இவர்களுக்காய் அமைக்கப்பட்ட ஆடம்பர விடுதிகள் கேளிக்கை நிலையங்கள் பிரயாணிகள் அற்ற சந்தர்ப்பங்களில் உள்ளூர் யாழ் மக்களை குறி வைத்தும் செயற்படுவதால் யாழின் இளம் சமூகம் பாரிய சவால் ஒன்றையே எதிர் நோக்குகின்றது... இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் உரிய கவனத்தை மேட்கொண்டார்களா மேற்கொண்டு வருகிறார்களா என்று தெரியவில்லை... மேலும் இவ்வாறு வருகை தரும் சிலர் வேண்டுமென்றே யாழின் கலாச்சாரத்தை எல்லாம் சீரழிக்கும் நோக்குடன் செயற்படுவது போல் செயற்படுவதாகவும் அங்கிருப்பவர்கள் சிலர் கூறுவதும் தெரிந்ததே...

வெளிநாட்டுப் பத்திரிகைகளும் இணையங்களுமா .....?

என்னதான் நடக்கிறதோ இல்லையோ சில பத்திரிகைகளுக்கும் இணையங்களுக்கும் அதை  மிகைப்படுத்தி கேவலப்படுத்துவடே வேலையாகிவிட்டது.... இப்பொழுதெல்லாம் எப்படி செய்தி எழுதுகிறார்கள்.... "யாழில் இளம் பெண் கணவனைக் கைவிட்டு கள்ளக் காதலனுடன் ஓட்டம்" , "யாழில் வெற்றிகரமாக நடைபெறும் விபச்சார சாம்ரச்சயம்" இவை எல்லாம் இணையத்தில் வெளியாகிய செய்திகளின் தலைப்புக்கள்.... நம்மவர்களும் இவ்வாறான செய்திகளைத் தானே விரும்பிப் படிப்போம் படித்துவிட்டு என்ன செய்வது அடை பற்றி 10 பேரிடம் இதைப்பற்றி சந்தோசமாய் விவாதிப்பது.... நம்மை  நாம் கேவலப்படுத்திக் கொள்கிறோம் என்பதை மறந்து விட்டு....சில நாட்களுக்கு முன் இந்தியத் தமிழ்த் தொலைகாட்சி ஒன்றில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பி இருந்தார்கள் ஒரு பெண் தன் கணவனை விட்டு விட்டு இன்னுமொரு ஆடவனுடன் சேர்ந்து வாழ விரும்புவதை சொல்வதைப்  பற்றி அந்தப் பெண்ணின் வயது 28 அவர் 28 வருடமாக தமிழ் நாட்டில் தான் வசிக்கிறாராம்...ஆனால் நம் துரதிஷ்டம் பிறந்தது யாழ்ப்பணத்தில்.... செய்தி என்ன தெரியுமா..."கணவனை விடுத்து வேறொரு ஆடவன் வேண்டும் என கதறி அழும் யாழ்ப்பாணத்துப் பெண்" .. பிறந்தது மட்டுமே யாழ்ப்பாணமான பெண் எப்படி முழுமையாய் யாழ்ப் பெண்ணானாள்....யாழில் இன்னும் 80%  சமூகம் இதற்காய் வெட்கப்பட்டுக் கொண்டும் இன்னும் அதே பழைய வாழ்க்கையே வாழ்ந்துகொண்டு இருக்கின்றது என்பதும் நம்பிக்கை... இவ்வாறான செயற்பாடுகள் ஒட்டு மொத்த சமூகத்தையே கேவலபபடுத்துவதாய் அமைகிறது அல்லவா....

இவ்வாறு கலாச்சாரங்களில் கழிந்தும்,கழியாத போது சிலரின் கதைகளில் எமைக் கழிந்தும் போய்க் கொண்டிருந்த எம் யாழ்.. இன்று மண் என்ற நிலையிலும் சூறையாடப் படுகின்றதுவா... முருகண்டிப் போராட்டங்களும் அங்கே பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களும் வெளியில் வாழும் ஒவ்வொரு தமிழர் மத்தியிலும் இவ்வாறான சிந்தனைகளை முடுக்கி விட்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை....இடத்தில் மட்டுமின்றி இனத்திலும் கூட எமக்கு தனித்துவம் உண்டல்லவா....பல்லின மக்களையும் பல்வேறு கலாச்சாரத்தையும் பல சமூகத்தவர்களையும் கொண்ட கொழும்பு போன்ற ஒரு இடத்தில் எமக்குரிய பிரத்தியோகம் என்பது எதிர் பார்க்கப்பட முடியாது தான்... ஆனால் காலம் காலமாக  எமக்கே எமக்கு என பெயர் சொல்லும் எம் மண் எப்போதும் அதே கர்வத்துடன் பெயர் சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்க்கை எம்மவர்கள் அனைவரிடமும் இருக்குமல்லவா...இவற்றை எல்லாம் தாண்டி எம்மவர்களிடையே உள்ள பிரதேச வாதங்களும் பிரிவினைகளும் கூட எம்மை மேலும் தளர்வு நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை....இவையும் இங்கே கவனிக்கப்பட வேண்டியவையே 

தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து  நில்லடா என்றான் அன்று புரட்சிக் கவி தலை நிமிரவிட்டலும் பரவாயில்லை தரணியில் வாழும் நாள்வரை தலை கவிழாமல் வாழ்ந்துவிட்டு போவோமே....

மீண்டும் சந்திக்கலாம்...
இப்படிக்கு 
ப்ரியமுடன் Prakhash






இசையே மொழியாய்க் கலந்துறவாடி... இசையை களமாக்கி மகிழ்ந்துறவாடும் வரிசையில் நம்மவர் படால்களும் அவ்வப்போது தனி இடம் பெற்றுச் செல்லும் அந்த வரிசையில் இடம் பெறும் நோக்கில் எம்மவர்களால் வெளியிடப்பட்டுள்ள பாடல் ஒன்றைப்பற்றிய பார்வையே இந்த வலைப்பதிவு....


"உயிரோடு வந்தாய் உணர்வைத் தின்றாய் உயிரைக்கொன்றாய் ஏனடி இன்னும் காதல் வீணடி" சிலநூறு வாத்தியங்கள் பலநூறு பணியாட்கள் எதுவுமின்றி சில மென்மையான தொழில்நுட்பங்களின் உதவியுடனும் வளங்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ள அற்புதமான இந்தப் படைப்புக்கு முதலில் இந்த நண்பனின் வாழ்த்துக்கள்....அற்புதமான இசை அழகிய வரிகள் இன்னும் பாடலுக்கு தரம் சேர்க்கும் வகையில் பொருத்தமான குரல் சேர்க்கை என்பன பாடலை மனதில் தொடர்ச்சியாக ஒலிக்க செய்கின்றன... நாங்கள் யாழ்கடந்த தமிழர்கள் தவறவிட்ட இடங்களில் உருவாக்கம்பெற்ற இந்த ஒளிச் சேர்க்கை எம்மவர் மனதில் மேலும் அவா உருவாவதற்கு காரணமாயும் அமைகின்றது...காட்சி அமைப்புக்கள் காட்சியில் அமைப்புக்கள் என்பனவும் பாடலின் தரத்தை மேலும் மெருகூட்டுகின்றன...

நிறைகள் ஒரு படைப்பாளனை மெருகூட்டுகின்றது அதுபோல் குறைகள் பகிரப்படும் போது அது அந்த படைப்பாளனை வளமாக்குகிறது என்பார்கள் அவ்வையில் இங்கே என் மனதில் பட்ட தனிப்பட்டு நான் குறை என கருதும் விடயங்களையும் பகிர்ந்துவிடுகிறேன் பாடலின் வரிகளும் காட்சியமைப்புகளும் நன்றாக இருப்பினும் சில வேளைகளில் பாடலின் வரிகள் காட்சியமைப்புகளுடன் சற்று முரண்படுகின்றன என்பது இங்கே கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்று... மேலும் இக்கால பாடல்களில் எல்லாம் ஏதோ கலப்படம் போல பிற மொழிகள் சேர்க்கப்படுவது வழமையாகி விட்டது இந்தப்பாடலிலும் அதே போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன அழகாக இருந்தாலும் அதே அழகை எம் மொழியிலும் காட்ட இயலாதா.... அதற்கு பிற மொழி அவசியமா....இவை இந்த பாடலின் மீது இருக்கும் மோகத்தை கொஞ்சம் குறைப்பதாயே எனக்கு தோன்றுகிறது... நண்பர்கள் இதை கவனிப்பின் மேலும் நன்றாக இருக்கும்....
அத்துடன் தொடர்ச்சியாக காதல் பாடல்கள் மட்டுமின்றி வேறு வகையான பாடல்களையும் நண்பர்கள் உருவாக்க வேண்டுமென்றது என் அவா....

குறைகளை கொஞ்சம் விலத்திவிட்டுப் பார்த்தால் இந்தப்பாடல் அழகிய மேகங்களின் சுகமான மழைத்தூறல்....மீண்டும் மீண்டும் நனையலாம் ... இசையின் ரகங்கள் என்றும் சுகமே.... இதிலும் நலமே.....நண்பர்களின் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் .....

மீண்டும் சந்திக்கலாம்
இப்படிக்கு
ப்ரியமுடன்
S.PRAKHASH....


(இளைய தளபதி விஜய் பற்றி தேவையான அளவு நண்பர்கள் ஏற்கனவே கழுவிக் கழுவி ஊத்தி விட்டதால் இந்த பதிப்பின் நோக்கம் அவரை மேலும் கழுவி ஊத்துவதோ..இல்லை அவரின் பீலதாளன்களை பறைசாட்டுவதோ அல்ல.. அத்துடன் நான் விஜயின் ரசிகனுமல்ல எதிரியும் அல்ல என்பதை முன்னமே குறிப்பிட்டு கொள்றேன்....)

நான் இண்டைக்கு ஒண்டும் எழுதுற idealaye இருக்கலைங்க ஆனா என்ன மட்டும் ஏன் இப்படி பிளான் பண்ணி தாக்குறாங்க எண்டு தெரியல காலை நடந்த ஒரு விசயதிட வெளிப்பாடு தான் இந்த மனக் குமுறல்.....இல்லாட்டி பாவம் தானும்தண்ட பாடும் எண்டுமற்றவங்கள பேய்க்காட்டிக் கொண்டிருக்கிற அந்த பிள்ளைய பற்றி நான் ஏன் கதைக்க போறன்....
இண்டைக்கு தலைவர்ட புறந்த நாளாம்.... நண்பன் ஒருத்தன் போன் பண்ணினான்.... அடிச்சு பிடிச்சு எழும்பி யாரடா மச்சான் என்டன்....நம்ம இளைய தளபதி விஜய்ட தாண்ட எண்டான்.... போடா ம****** இன்னும் விடியவே இல்ல தூக்கத்த கெடுத்துட்டியே எண்டு கத்தாத குறையா ஏசிற்று வச்சன்....ஏன் இந்த கொலைவெறி என்ன மட்டும் எல்லாரும் பிளான் பண்ணி தாக்குறாங்க....இழிச்சவாயன் எண்டு எங்கயாவது எழுதி ஒட்டி இருக்கோ ... சரி  அதவிட்டிட்டு விசயத்துக்கு வருவம்...
விஜயி என்டா ஏன் இந்த கடுப்பு ஏன் இந்த வெறுப்பு எல்லார் போலயும் விஜய் படம் பிடிக்காம எனக்கு அவங்க தல மேல வெறுப்பு வரலைங்க....வழமையா நம்ம பசங்க எல்லாம் விஜய் படம் பர்த்துற்று அவன கழுவிக் கழுவி ஊத்துவாங்களே.... அதில இருந்தே கொஞ்சம் கொஞ்சமா விஜய் எண்டாலே ஏதோ தீண்டத் தகாத பண்டம் மாதிரியே நினைப்பு வந்திடுச்சு.... ஒருகாலத்தில துள்ளத மனமும் துள்ளும், பூவே உனக்காக போல சில நல்ல படங்கள் நடிச்ச போது நானும் அந்த விஜய்க்கு ஒரு ரசிகனா இல்லாட்டியும் பார்வையாளன தான் இருந்தான்... ஆனா காலம் போன கோலம் விஜய்ட படம் போன கேவலம் எல்லார்ட மனசிலையும் வெறுப்ப உண்டாக்க அவங்க ரசனையின் வெளிப்பாடுகள் என்லையும் நிறைய தாக்கம் செலுத்திடுச்சு.....

அத விட மேலதிகமா ஒரு விஷயம் இருக்கு இந்த விஜய்ட ரசிகர்கள் விஜய்ட ரசிகர்கள் எண்டு சொல்லிக்கிட்டு இருக்காங்களே அவங்க பண்ற அளப்பர இருக்கே தாங்க முடியல.....இந்தியால தான் ஏதோ படம் வந்த விஜய் படத்துக்கு பாலபிசேகம் செய்வங்கலம் கேவலமா.... ஆனா இன்னும் ஜாபகமிருக்கு நல்லா அழகிய தமிழ் மகன் எண்டு ஒரு படம் எடுத்தாங்களே அது எப்படி வந்திச்செண்டேல்லாம் ஏற்கனவே சொல்லியாச்சு நிறைய பதிவுகளள.... அண்டைக்கு முதல் முதலா அப்பிடி ஒரு சம்பவத்தை ரொக்ஸ்சி திரை அரங்கில பாக்கிற பாவம் எனக்கும் கிடைச்சுச்சு.... இப்பிடித்தான் பக்கம் பக்கம் பக்கமா status போடுறது... அவர் தலைய கிளறினா கிளரிகிறது இப்பிடி இவங்க செய்த அளப்பரைகளே என்னைப் போன்ற பலரை இவ்வாறு வெறுப்புக்கொள்ள வைச்சுடுச்சு....

இப்பிடி எல்லாம் பேசுறியே அப்புறம் என்னத்துக்கு விஜய் படம் பாக்க போறனி எண்டு சிலர் கேட்கலாம்.... அது ஒண்டும் பெரிய மேட்டர் இல்லீங்க இந்த வயசில காதல பற்றி கதைச்ச எவ்வளவு சந்தோசமா இருக்கும்...அத விட இப்பெல்லாம் விஜய் படம் பர்த்துற்று அத பற்றி கேவலமா கடிக்கும் போது வாற சுகமிருக்கே அத எல்லாம் எவ்வளவு சொன்னாலும் புரியாதுங்க... ஆனா ஒண்டு இப்ப கடைசியா ஏதோ 2 படம் அவரும் நல்லா கொடுக்க try பண்ணி இருக்காதா சொல்றங்க..... பவர் ஸ்டார் சீனிவாசன் போன்ற விஜய் மாதிரி திறமையும் தன்னம்பிக்கையும் கொண்ட நடிகர்கள் ஏரளமானவங்க இப்ப போட்டிக்கு வந்திட்டதால விஜய் நின்று நிலைத்தது நடிப்பதற்கு சிறந்த படங்களை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை.....

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய் அவர்களே....

மீண்டும் சந்திக்கலாம்
இப்படிக்கு
ப்ரியமுடன்
PRAKHASH.....





வாலிப வயோதிக நண்பர்களே அன்பர்களே நான் என் வாழ்க்கையில கேட்டு தெளிஞ்ச தெளியாத விசயங்களா வைச்சு உங்களுக்கு ஒரு குட்டி கதை சொல்ல போறன்.... இத ஒரு காதல் கதை எண்டு வேற சொல்லலாம்..... காதல் கதை எண்டும் சொல்லலாம் எண்டோன்ன நான் வேற ஏதோவும் சொல்ல போறன் எண்டு நீங்க எதிர் பாக்கலாம் அதால காதல் கதையே சொல்ல போறன் எண்டு சொல்லிட்டேஎன் கதைய தொடக்குறன்....


இந்த கதைய சொல்லன்னுமேண்ட முதல் எங்க கம்பஸ பற்றி சொல்லணும்... எங்கே கம்பஸ் இருக்கே கம்பஸ்... அது எப்பிடி இருக்கும் தெரியுமா... சுத்தி பாக்கிறதுக்கு ஒரு நாள் போதாது... மரம் செடி கோடி என்ன கட்டிடங்கல்ட விசாலமென்ன ஏன் கம்பசுக்கு பின்னாடி பெரிய ஆறு வேற ஓடுது... அதோட மட்டுமா கம்பஸ்ல ஜூன் ஜூலை மாதங்கள்ள ஒரு மஞ்சள் பூ எல்லா இடமும் பூக்குமே அந்த சுகம் எப்பிடி இருக்கும் தெரியுமா.... வந்து பார்த்தவங்களுக்கு தெரிஞ்சுருக்கும்... நிறைய பேர் வந்திருக்க மாட்டங்க...பேரா பல்கலைல படிக்கிற ஒரு நண்பர கூட்டி வந்து 4 மணி நேரமா எங்க கம்பஸ திணறத் திணற சுத்திக் காட்டிய ஜாபகங்கள் இன்றும் உண்டு ... சரி சரி விசயத்துக்கு வருவம்... இப்படித்தான் பூத்துக் குலுங்கும் எங்க பல்கலை சாலைகளில் காதல் மழையில் நனைய நினைத்தவர் எத்தனையோ பேர்..... 

இப்பிடி ஒரு கம்பசுக்குள்ள நானும் போனான்.... எத்தனையோ எதிர் பார்ப்புகள் கனவுகள்..... இவ்வளவு கூட்டமா போகும் போதே கன்டீனுக்குள்ள இத்தன அண்ணா அக்காமார் இருக்கினமே ஜோடிய இப்பிடி நெருக்கமா.... இல்லாத நேரம் எப்பிடி இருக்கும்... இப்பிடி எல்லாம் ஜோசிச்சுட்டு போயிற்று இருந்தான்... அப்பதான் பின்னாடி என் அருமை நண்பர் ஒருவரும் வந்திற்று இருந்தார்... நாங்களாவது அடிக்கடி galleface பக்கம் போகும் போது இதெல்லாம் பார்த்துருப்பம் ஆனா அவர் இப்ப தன் கொழும்புக்கு புதுசா வந்திருந்தார்...அவனடிச்ச லூட்டி இருக்கே நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் மச்சான் இதெல்லாம் இப்பிடி நேரடிய பாக்க கூடாதுடா கடைக்கன்னால பார்த்தும் பாக்காத மாதிரி பாகனுமேண்டு பயபுள்ள கேட்ட தானே... இது பத்தாதெண்டு ஒரு அஞ்சு வரிசை தள்ளி அவன்ட ஆள் வேற கம்பஸ் வார போற புதுசுல  தான் பையன் அவள பிடிச்சுருந்தான் அவளை பாகிறதும் காண்டீன பாகிறதும் என்கிட்ட நொய்யு நொய்யு எண்டுறதும் அவன்ட அளப்பற இருக்கே தாங்க ஏலாம போச்சு... எங்க கம்பஸ்ல வேற அழகான பொண்ணுங்க ஜாஸ்தியா நம்ம பசங்க எல்லாம் சைட் அடிக்கிறதில ரொம்ப ஆர்வமா இருந்தாங்க என் தலை எழுத்து இப்பிடியா அமையனும்.... எங்க ஊர்ல அப்பவே சொல்லுவாங்க புதுசா தண்ணி அடிக்கிறவன் கூட இருந்தாலும் புதுசா காதலிக்கிறவன் கூட சேரதடா எண்டு நான் கேட்டனா....

இப்பிடித்தான் கொஞ்ச நேரம் கழிய யாரோ ஒரு புண்ணியவான் அண்ணா ஒருத்தர் வந்து என்ன இடம் மாத்தி விட்டார் ... இதுதான் நான் கம்பஸ்ல முதல் முதல் அனுபவிச்ச காதல் கதை இல்ல இல்ல காதல் வதை.... இப்பிடி தான் உருப்படாம தொடங்கின என் கம்பஸ் வாழ்க்கை இன்னும் உருப்படாமலே போயிற்று இருக்கு.... முதல் நாள் கான்டீன்ல உட்கார ஜோசிச்ச நம்ம காதல் ஜோடி மாதங்கள் கழிஞ்ச பிறகும் இன்னும் பிளான் பண்ணிக்கிட்டு தன் இருக்காங்கலாம்......

(இதில பாதி கற்பனை பாதி உண்மை.... இங்க வாழறவங்களுக்கு புரிஞ்சுருக்கும் எது கற்பனை எண்டு.... சில நேரம் வந்தவங்களுக்கும் புரிஞ்சுருக்கும் ....)

மீண்டும் சந்திப்போம்
ப்ரியமுடன்
PRAKHASH......


நான் மழை காலத்தில் தேடிய 
பெண்ணவள் குடையாய் இன்று 
என் அருகில்....
நான் மணக் கோலத்தில் தேடிய 
பெண்ணவள் மனைவியாய் இன்று
எங்கோ தெருவில் .....
எத்தனை மாற்றங்கள் 
கண்டோம்
அத்தனையும் கண்முன்னே 
தூறல்களாய்
பட்டுப் பூச்சி வாழ்கையல்ல
எட்டு நாளில் பட்டுவிட
மழைநின்ற பின்னும் நிற்காத தூவானமாய்
அவள் மடிதனை தேடுகிறேன்
கிடைத்தது அந் நங்கை அல்ல
ஈற்றில் அவள் தங்கை
வாய்த்த வரையில் லாபம்
மீண்டும் தூவானம் தூறத் தொடங்கிற்று..................


இப்படிக்கு ப்ரியமுடன்
Prakhash.............

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான ஒருகல் ஒரு கண்ணாடி திரைப்படம் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் முழுவதுமாய் பூர்த்திசெய்யவில்லை என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை... சிவா மனசில ஷக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற சிறந்த படங்களை தந்த இயக்குனர் ராஜேசிடம் இருந்து நிச்சயமாக ரசிகர்கள் இவ்வாறனதொரு படைப்பை எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.. அறிமுகநடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஓரளவு சொதப்புகிறார்..படத்தை இரு தூண்களாக படத்தை தாங்கி நிற்பது சந்தானத்தின் காமடியும் ஹரிஸ் ஜெயராஜின் இசையும் மட்டுமே... ஹன்சிக மேத்வணியை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாப்பாத்திரத்தில் வந்துபோகிறார்..உதயநிதி ஸ்டாலினின் அம்மாவாக வரும் சரண்யா மோகன் நடிப்பிலே ஜொலிக்கிறார்,சந்தனம் மற்றும் அவருடைய காதலியாக வருபவரினதும் கலாட்டாக்கள்
படத்துக்கு வலு சேர்க்கின்றன சுவாமியராக வருபவரின் காமடி படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் மனதில் நிற்கிறது ....கௌரவ தோற்றத்தில் வரும் ஆர்யா சினேகா அண்ட்ரியா போன்றோர் தமக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைகளை சிறப்பாக செய்துள்ளனர்...பாடல்களில் நடன அமைப்பு அவ்வளவாக சீராக அமையாத போதும் பாடல் படமாக்கப்பட்டுள்ள விதம் மற்றும் படமாக்கிய இடங்கள் அழகு... இருந்த போதிலும் படத்தில் இடம்பெறும் " வேணம் மச்சான் வேணம்" பாடல் ஓரளவு குறிப்பிடும்படி அமைகின்றது....இயக்குனரின் முந்தய இரு படங்களின் பாதிப்புகள் படத்தில் அதிகமாக வந்து போவது படத்தின் வேகத்தையும் ஓரளவு குறைக்கின்றது .. மொத்தத்தில் ஒருகல் ஒரு கண்ணாடி மொக்கை காமடிகளின் கோர்வை ....


இப்படிக்கு
ப்ரியமுடன்
Prakhash...

என் வலைப்பூவில்...

ஜாபகங்கள் அனுபவங்கள் கனவுகள் கனவுகளின் விதைகள் நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கும்....என்னுள் இருப்பவற்றின் சில தேடல்களும் என் கனவுகளும் இங்கே....அதைத்தாண்டி பார்த்துக் கேட்டு ரசித்தவற்றில் பிடித்தவற்றை மட்டுமல்ல வெறுத்தவைகளையும் சில நேரம் இங்கே பகிர்கிறேன்....உங்களையும் சிலது நினைவூட்டட்டும்...
Powered by Blogger.

Followers