நான் மழை காலத்தில் தேடிய 
பெண்ணவள் குடையாய் இன்று 
என் அருகில்....
நான் மணக் கோலத்தில் தேடிய 
பெண்ணவள் மனைவியாய் இன்று
எங்கோ தெருவில் .....
எத்தனை மாற்றங்கள் 
கண்டோம்
அத்தனையும் கண்முன்னே 
தூறல்களாய்
பட்டுப் பூச்சி வாழ்கையல்ல
எட்டு நாளில் பட்டுவிட
மழைநின்ற பின்னும் நிற்காத தூவானமாய்
அவள் மடிதனை தேடுகிறேன்
கிடைத்தது அந் நங்கை அல்ல
ஈற்றில் அவள் தங்கை
வாய்த்த வரையில் லாபம்
மீண்டும் தூவானம் தூறத் தொடங்கிற்று..................


இப்படிக்கு ப்ரியமுடன்
Prakhash.............

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான ஒருகல் ஒரு கண்ணாடி திரைப்படம் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் முழுவதுமாய் பூர்த்திசெய்யவில்லை என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை... சிவா மனசில ஷக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற சிறந்த படங்களை தந்த இயக்குனர் ராஜேசிடம் இருந்து நிச்சயமாக ரசிகர்கள் இவ்வாறனதொரு படைப்பை எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.. அறிமுகநடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஓரளவு சொதப்புகிறார்..படத்தை இரு தூண்களாக படத்தை தாங்கி நிற்பது சந்தானத்தின் காமடியும் ஹரிஸ் ஜெயராஜின் இசையும் மட்டுமே... ஹன்சிக மேத்வணியை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாப்பாத்திரத்தில் வந்துபோகிறார்..உதயநிதி ஸ்டாலினின் அம்மாவாக வரும் சரண்யா மோகன் நடிப்பிலே ஜொலிக்கிறார்,சந்தனம் மற்றும் அவருடைய காதலியாக வருபவரினதும் கலாட்டாக்கள்
படத்துக்கு வலு சேர்க்கின்றன சுவாமியராக வருபவரின் காமடி படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் மனதில் நிற்கிறது ....கௌரவ தோற்றத்தில் வரும் ஆர்யா சினேகா அண்ட்ரியா போன்றோர் தமக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைகளை சிறப்பாக செய்துள்ளனர்...பாடல்களில் நடன அமைப்பு அவ்வளவாக சீராக அமையாத போதும் பாடல் படமாக்கப்பட்டுள்ள விதம் மற்றும் படமாக்கிய இடங்கள் அழகு... இருந்த போதிலும் படத்தில் இடம்பெறும் " வேணம் மச்சான் வேணம்" பாடல் ஓரளவு குறிப்பிடும்படி அமைகின்றது....இயக்குனரின் முந்தய இரு படங்களின் பாதிப்புகள் படத்தில் அதிகமாக வந்து போவது படத்தின் வேகத்தையும் ஓரளவு குறைக்கின்றது .. மொத்தத்தில் ஒருகல் ஒரு கண்ணாடி மொக்கை காமடிகளின் கோர்வை ....


இப்படிக்கு
ப்ரியமுடன்
Prakhash...


அன்று நான் சாலையில் உன்னைப்பார்த்தது
நெஞ்சம்தான் காதலில் இன்று ஏங்குது -அன்பே
அன்று நான் சாலையில் உன்னைப்பார்த்தது
நெஞ்சம்தான் காதலில் இன்று ஏங்குது

கடலில் ஒரு துளி
நினைவில் ஒருதுளி
ஏனோ எந்தன் நெஞ்சில் வலி
காதல் ஒரு வலி
தேடல் ஒருவலி
நீதானே எந்தன் காதல் தோழி 

காதலித்த நெஞ்சம் அடியன்பே 
காணவில்லை கொஞ்சம் அதுயிங்கே
சகியே நீதான் கண்டு கொண்டுசென்றயோ 

நீயில்லாத உலகம் அது காற்றில்லாத நரகம்அடி
எந்தன் நெஞ்சில் தீயை மூட்டி குளிர் கைகின்றாய் அன்பே
நான் விடும் மூச்சில் கொஞ்சம் நீ குளிர்கின்றாய் 

(கடலில் ஒரு துளி.......)

ஏதோ மனதிலே ராகம் வளருதே
காதல் என்றுதான் நானும் சொல்லவா
ஏனோ என்நிழல் தேடல் கண்டது
உந்தன் துணை தான் அதுவும் நோக்குதா.....

அடி மலரின் வாசனை அது மாறிப் போகலாம்
மனதின் நேசம்தான் அது மாறிப் போகுமா 
என்னிலே என்னிலே நீதான் பௌர்ணமி 
கெஞ்சினான் கேட்கிறேன் மெல்லத் தேயாதே..................

( கடலில் ஒரு துளி.......)



ப்ரியமுடன் 
Prakhash......






"உலகத்தில இத்தனை பொண்ணுங்க இருந்தும் நான் ஜெசிய மட்டும் ஏன் காதலிச்சன்"இது காதல் தூக்கிவாரிப் போட்ட பாதிப்பில் இருந்த ஒரு இளைஜன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில்  சொன்னது... அவளைப் பார்க்காத வரைக்கும் அந்த வார்த்த ஏதோ எனக்கும் சாதரணமா தான் இருந்தது, காதல் என்பது கூட சில காலம் முன் வரை எனக்கு ஏதோ சாதாரண வார்த்தை தான், அனால் இன்று அதை கேட்டு ரசிக்கிற அளவுக்கு என் மனம் எப்பிடி மாறியது என்று எனக்கே தெரியவல்லை...
 
அன்றிரவு ஒரு நாள் எட்டு மணி இருக்கும் என் வீட்டு மொட்டை மாடியில் நான் என்றும் போல் இரவை ரசித்தபடி அமர்ந்திருந்தேன், வழமையாய் பிறைவடிவிலாவது தோன்றும் சந்திரன் வானத்திடை மறந்திருந்தான்.. அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை புதிதாய் ஒரு பௌர்ணமி என் மனத்திடை வரப்போகின்றது என்று....நேரம் செல்லச் செல்ல மழை மெல்லத் தூர ஆரம்பித்த வேளை யாரோ ஒருத்தி என் வீட்டு வாசலோரம் ஒதுங்கி வந்தாள், அவள் அழகிய புருவமும் மெல்லிடை நளினமும் என்னை கொஞ்சமாய் அவளிடத்தில் ஈர்த்தன ...

பாதையில் நடந்து போகும் போது ஆயிரம் முட்கள் கிடக்கலாம் அனால் ஏதோ சில தான் எம் காலில் ஏறும் அதுபோல் தான் கடந்து போகும் ஆயிரம் பெண்களில் எவளோ ஒருத்திதான் எம்மைத் திருப்பிப் பார்க்கவும் வைப்பாள் முட்குத்திய வலியோ சோகமானது ஆனால் ஆனால் அவளைப்பார்த்த போது என்னில் உண்டான வலி அன்றெனக்கு சுகமாகத்தான் தெரிந்தது, ஒதுங்கி நின்ற அவள் என்னை மெதுவாய்த் திரும்பிப் பார்த்தால் அவளின் அழகிய நளினங்கள் என்னை அவளிடம் பேசத் தூண்டின, ஏதோ தைரியத்துடன் அவளிடம் பேச விளைந்தேன்.....

அவளிடம் என்னை அறிமுகம் செய்தேன் முதலில் மௌனம் சாதித்தாலும் பிறகு அவளும் தன் அறிமுகம் கூறினாள்,நான் குடியிருக்கும் வீதியில் கடைசி வீடுதான் அவள் வீடு என்றாள், நானும் ஆவலுடன் பேசியபடி என் குடையை எடுத்துக்கொண்டு அவளை அவள் வீட்டில் விடுவதற்காய் அவளுடன் சென்றேன், கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் அவள் என் கேள்விகளுக்கு பதில் தர தயங்கவில்லை...

மழைத்தூறல் மெதுவாய் நின்றுவிட்டது ஆனால் என் மனத்தூறல் அப்பொழுதுதான் அடைமழையாய்...அவளிடம் ஏதோ கூற வேண்டும் போல் இருந்தது." உங்களிடம் ஒன்று கூறலாமா தயக்கத்துடன் கேட்டேன் அவளும் தலை அசைத்தாள்," நான் உங்களை விரும்புவதாக கருதுகின்றேன் ஆனால் தெரியவில்லை அப்படித்தான் தோன்றுகிறது நான் அவ்வாறு கூறினால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன்.. அவளும் சற்று நேரம் மௌனமாய் நின்றுவிட்டுச் சென்றுவிட்டாள், நானும் செய்வதறியாது வீடு திரும்பிவிட்டேன் 

இரண்டு வாரங்கள் கடந்தன அவ்விரண்டு வாரங்களும் அவள் கடந்து போகும் பாதை வழியே அவளுக்காய் காத்து நின்றிருப்பேன் அவள் தலைகுனிந்தபடி சென்றுவிட்டாள் மனம் களைத்தபடி ஏதோ மன வாட்டத்துடன் காத்திருந்த போது மீண்டும் ஒருநாள் அதே போல் ஒரு இரவு அதே போல் ஒரு மழை நாள் அவள் என் வீட்டருகில் ஒதுங்கினாள் ஆனால் இன்றோ கையில் குடையுடன்..என் மனம் ஏதோ பதில் கூறியது என்றாலும் அவள் வாயால் கேட்பதற்காய் அவளருகில் சென்றேன் அவள் என்னைப்பார்த்துப் புன்னகைத்தால் அவள் புன்னகை எனக்கு ஆயிரம் பதில்கள் உரைத்தது ....அவளும் என் மீது காதல் கொண்டுவிட்டாள்

இரண்டு மாதங்கள் நன்றாக ஓடின அனால் அவள் தந்தையின் திடீர் இடமாற்றம் அவளையும் வேறோர் பிரதேசத்துக்கு இடம்பெயர வைத்தது, நான் கூட இதை அறிந்திருக்கவில்லை,அவளுக்கும் கடைசி நேரம் வரை இது தெரியாது போலும்... ஆறு மாதங்கள் அவளை எங்கெல்லாமோ தேடி அலைந்தேன் காணவில்லை, என் கவலையை கொஞ்சமாவது மறக்க நானும் இடமாற்றம் கேட்டுப்பெற்றுக்கொண்டு வேறிடம் சென்றேன், புதிதாய் வடிவமைக்கப்படும் ஒரு நவநாகரீக நகரத்தின் பொறியியல் வடிவமைப்பாளர்களுள் நானும் ஒருவன் பாதி நேரங்கள் தூக்கமின்றி வேலையுடன் கழிந்தது ஏங்கிய சில மாலை நேரங்களில் என் தனிமைக்கு கடற்கரைகளும் கட்டாந்தரைகளும் களம் அமைத்தன... அப்படித்தான்  அன்று ஓர் நாள் கடற்கரையில் தனிமையில் காத்திருக்கையில் எங்கேயோ கேட்ட குரல் என்னைத் திரும்ப வைத்தது..

ஆம் அது அவளேதான் ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக காணப்பட்டாள் ஆறுமாதங்கள் களிந்தல்லவா பார்க்கிறேன் அதுதான் வித்தியாசமாக தோன்றுகிறதோ...? அவளும் என்னைக்கண்டுவிட்டால்.. மெல்லத் தயங்கியபடி என் அருகில் வந்தாள் நலமாக இருக்கிறாயா அவளின் நாக்கு தடுமாறியது,என் கண்களும் ஏனோ அவள் முகம் விட்டு அகலவில்லை,"இத்தனை நாட்கள் எங்கே  போயிருந்தாய் ஒரு தொலைபேசி கூட எடுக்காமல் கொஞ்சம் ஆவேசமாய்க் கேட்டேன், கோபமும் இருக்கும் "தானே  ஆனால் அவளின் பதிலோ மௌனம் தான், எண்ணற்ற வார்த்தைகள் பேச வந்த என் வாய் ஒருநிமிடம் தடுமாறியது, அது அவளின் திருமணப்பத்திரிகை கண்டு ........... ஆறு மாதங்கள் அவளை தேடி அலைந்த போது நானடைந்த வேதனை இன்று ஒரே நொடியில் என்னுள்ளே.....

 திருமணமா ? உனக்கா? மெதுவாய் கேட்டேன், தயவுசெய்து தவறாய் நினைக்க வேண்டாம் என் சூழ்நிலை அப்பிடி அவ்வளவு தான் அவளால் கூற முடிந்தது, எனக்கு வாயில் ஏதோ எல்லாம் திட்ட வேண்டும் போல் இருந்தது அப்படிஎன்றால் அன்றே ஒதுங்கியிருக்கலாம் தனே என்னைக் காதலித்தாள் பின் பிரிந்து சென்றாள் இப்பொழுது திருமணம் என்கிறாள்... எனக்கு என்னவெல்லாமோ கொட்டித் தீர்க்க வேண்டும் போல் இருந்தது ஆனால் வாய்மூடி இருந்துவிட்டேன். " நாளை காலை திருமணம்" பத்திரிக்கை தந்துவிட்டுச் சென்றுவிட்டாள்... ஆவலுடன் ஆடிய கண்ணாம்பூச்சி ஆட்டங்கள் இன்று கண்முன்னே விட்டில் பூச்சியின் சிறகொடிந்த உடல் போலே.....

மறுநாள் காலை விடிந்தது நேரமும் ஒஓடிக்கொண்டு இருந்தது அவளின் திருமணத்துக்கு சென்று வாழ்த்துமளவுக்கு என் மனதில் தைரியமில்லை.. புதிய வீட்டு மொட்டைமாடியில் நாள் பூராகவும் அமர்ந்திருக்கிறேன்... வேலைக்குக் கூடப் போகாமல் ...நேரமும் ஓடியது காலை மதியம் மாலை என இரவும் வந்துவிட்டது...அதே போல் ஒரு இரவு நேரம் எட்டு மணியிருக்கும் அவளுடன் முதல் இரு சந்திப்புக்களையும் நினைவுபடுத்துவது போல மழைத்துளிகள்...காய்ந்தது கிடந்த என் இதயத்தை மெல்ல ஊடறுப்பது போல் , எத்தனை நாட்கள் அவளிற்காய் வெயிலிலும் மலையிலும் காத்திருந்திருப்பேன்...
 
காற்றில் மரங்கள் மெதுவாக அசைகின்றன.. என் வீட்டு வாசலோரம் யாரோ ஒரு பெண் மழைக்கை ஒதுங்குவது போல் ஒதுங்குகிறாள். கையில் குடையுடன்... ஆம் அது அவளேதான் வேகமாய் படிவழியே இறங்குகிறேன் வாசலை நோக்கிஓடுகிறேன்இளைத்த பெருமூச்சை மெதுவாய் உள்அமிழ்த்திவிட்டு வீட்டின் வாசல்க்கதவைத் திறந்தேன் 

அங்கே யாரையும் காணவில்லை யாவும் என் மனத்திடை வழியே தேங்கிக்கிடந்த வலிகளால் வெளிவந்த கனவுகள் போலும்... இந்நேரம் அவள் கணவனுடன் சங்கமித்திருப்பள்...கண்முன்னே கழிந்த,கலைந்துவிட்ட காலங்களும் கனவுகளும் மீண்டும் வரப்போவதில்லை ஆனால் மீண்டும் புதிதாய் ஒரு காலம் மலர்ந்து வரலாம் கனவுகள் துளிர்க்கலாம்... ஆனால் ஒன்று மீண்டும் என்னையே கேட்கிறேன் 

உலகத்தில இத்தனை பெண்கள் இருந்தும் நான் அவளை மட்டும் ஏன் காதலித்தேன் "


                                                                                                                                                            ப்ரியமுடன் 
                                                                                                                                                            Prakhash......


துடிக்குதே மனமே மனமே
உணகத்தின் சுகமே சுகமே
இங்கேதான் மூழ்கிக் கிடக்கிறதோ.......
கனவுகள் கைகள் கட்டி
கல்லூரி வாசல் தட்ட 
நினைவுகள் நிஜமாய் மலர்கிறதோ....

 
அந்தித் தென்றல் போலே 
இங்கே ஒரு சாரல்
நித்தம் நித்தம் வீசும் தோழா
நெஞ்சின் மழையாக..

கண்ணித்தென்றல் காற்று 
நம் கண்ணில் பட்டு போகும் 
கைகள் மெல்லப் பட்டால் அது 
காற்றில் ஓடிப் போகும்...

கருப்பு நிலா பார்க்கிறதே ஓரமாய் ஓரமாய்
மனம் காதலாலே சிரிக்கிறதே மௌனமாய் மௌனமாய் 
கருப்பு நிலா பார்க்கிறதா உனை ஓரமாய் ஓரமாய்
மனம் காதலாலே சிரிக்கிறதா மௌனமாய் மௌனமாய் ....

( துடிக்குதே மனமே மனமே....)

அந்த நாள் இன்று போல் இருக்கின்றதே 
வாசல் நமக்காய் இங்கே திறக்கின்றதே 
கண்டநாள் கனவுகள் கவிதைகளாய் எமை 
இன்று தான் கைகோர்த்து அழைக்கின்றதே 

மனம் ஏதோ சொல்விக்க
அது காலம் தன்னை நினைக்க 
நெஞ்சம் கொஞ்சம் துடிக்குதே தோழனே.....

காதல் கூட கடக்கும்
வாலிபம் தான் பறக்கும் 
நெஞ்சம் என்றும் நினைக்குமே உன்னையே ....


அந்த நாள் கனவு போல் மலர வேண்டுமே
வேண்டி நான் கேட்கிறேன் இறைவா உன்னையே.......



( துடிக்குதே மனமே மனமே....)

                                                                                        

                                                                                                                                               
ப்ரியமுடன்
                                                                                                                                               Prakhash .........

என் வலைப்பூவில்...

ஜாபகங்கள் அனுபவங்கள் கனவுகள் கனவுகளின் விதைகள் நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கும்....என்னுள் இருப்பவற்றின் சில தேடல்களும் என் கனவுகளும் இங்கே....அதைத்தாண்டி பார்த்துக் கேட்டு ரசித்தவற்றில் பிடித்தவற்றை மட்டுமல்ல வெறுத்தவைகளையும் சில நேரம் இங்கே பகிர்கிறேன்....உங்களையும் சிலது நினைவூட்டட்டும்...
Powered by Blogger.

Followers