வாலிப வயோதிக நண்பர்களே அன்பர்களே நான் என் வாழ்க்கையில கேட்டு தெளிஞ்ச தெளியாத விசயங்களா வைச்சு உங்களுக்கு ஒரு குட்டி கதை சொல்ல போறன்.... இத ஒரு காதல் கதை எண்டு வேற சொல்லலாம்..... காதல் கதை எண்டும் சொல்லலாம் எண்டோன்ன நான் வேற ஏதோவும் சொல்ல போறன் எண்டு நீங்க எதிர் பாக்கலாம் அதால காதல் கதையே சொல்ல போறன் எண்டு சொல்லிட்டேஎன் கதைய தொடக்குறன்....
இந்த கதைய சொல்லன்னுமேண்ட முதல் எங்க கம்பஸ பற்றி சொல்லணும்... எங்கே கம்பஸ் இருக்கே கம்பஸ்... அது எப்பிடி இருக்கும் தெரியுமா... சுத்தி பாக்கிறதுக்கு ஒரு நாள் போதாது... மரம் செடி கோடி என்ன கட்டிடங்கல்ட விசாலமென்ன ஏன் கம்பசுக்கு பின்னாடி பெரிய ஆறு வேற ஓடுது... அதோட மட்டுமா கம்பஸ்ல ஜூன் ஜூலை மாதங்கள்ள ஒரு மஞ்சள் பூ எல்லா இடமும் பூக்குமே அந்த சுகம் எப்பிடி இருக்கும் தெரியுமா.... வந்து பார்த்தவங்களுக்கு தெரிஞ்சுருக்கும்... நிறைய பேர் வந்திருக்க மாட்டங்க...பேரா பல்கலைல படிக்கிற ஒரு நண்பர கூட்டி வந்து 4 மணி நேரமா எங்க கம்பஸ திணறத் திணற சுத்திக் காட்டிய ஜாபகங்கள் இன்றும் உண்டு ... சரி சரி விசயத்துக்கு வருவம்... இப்படித்தான் பூத்துக் குலுங்கும் எங்க பல்கலை சாலைகளில் காதல் மழையில் நனைய நினைத்தவர் எத்தனையோ பேர்.....
இப்பிடி ஒரு கம்பசுக்குள்ள நானும் போனான்.... எத்தனையோ எதிர் பார்ப்புகள் கனவுகள்..... இவ்வளவு கூட்டமா போகும் போதே கன்டீனுக்குள்ள இத்தன அண்ணா அக்காமார் இருக்கினமே ஜோடிய இப்பிடி நெருக்கமா.... இல்லாத நேரம் எப்பிடி இருக்கும்... இப்பிடி எல்லாம் ஜோசிச்சுட்டு போயிற்று இருந்தான்... அப்பதான் பின்னாடி என் அருமை நண்பர் ஒருவரும் வந்திற்று இருந்தார்... நாங்களாவது அடிக்கடி galleface பக்கம் போகும் போது இதெல்லாம் பார்த்துருப்பம் ஆனா அவர் இப்ப தன் கொழும்புக்கு புதுசா வந்திருந்தார்...அவனடிச்ச லூட்டி இருக்கே நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் மச்சான் இதெல்லாம் இப்பிடி நேரடிய பாக்க கூடாதுடா கடைக்கன்னால பார்த்தும் பாக்காத மாதிரி பாகனுமேண்டு பயபுள்ள கேட்ட தானே... இது பத்தாதெண்டு ஒரு அஞ்சு வரிசை தள்ளி அவன்ட ஆள் வேற கம்பஸ் வார போற புதுசுல
தான் பையன் அவள பிடிச்சுருந்தான் அவளை பாகிறதும் காண்டீன பாகிறதும் என்கிட்ட நொய்யு நொய்யு எண்டுறதும் அவன்ட அளப்பற இருக்கே தாங்க ஏலாம போச்சு... எங்க கம்பஸ்ல வேற அழகான பொண்ணுங்க ஜாஸ்தியா நம்ம பசங்க எல்லாம் சைட் அடிக்கிறதில ரொம்ப ஆர்வமா இருந்தாங்க என் தலை எழுத்து இப்பிடியா அமையனும்.... எங்க ஊர்ல அப்பவே சொல்லுவாங்க புதுசா தண்ணி அடிக்கிறவன் கூட இருந்தாலும் புதுசா காதலிக்கிறவன் கூட சேரதடா எண்டு நான் கேட்டனா....
இப்பிடித்தான் கொஞ்ச நேரம் கழிய யாரோ ஒரு புண்ணியவான் அண்ணா ஒருத்தர் வந்து என்ன இடம் மாத்தி விட்டார் ... இதுதான் நான் கம்பஸ்ல முதல் முதல் அனுபவிச்ச காதல் கதை இல்ல இல்ல காதல் வதை.... இப்பிடி தான் உருப்படாம தொடங்கின என் கம்பஸ் வாழ்க்கை இன்னும் உருப்படாமலே போயிற்று இருக்கு.... முதல் நாள் கான்டீன்ல உட்கார ஜோசிச்ச நம்ம காதல் ஜோடி மாதங்கள் கழிஞ்ச பிறகும் இன்னும் பிளான் பண்ணிக்கிட்டு தன் இருக்காங்கலாம்......
(இதில பாதி கற்பனை பாதி உண்மை.... இங்க வாழறவங்களுக்கு புரிஞ்சுருக்கும் எது கற்பனை எண்டு.... சில நேரம் வந்தவங்களுக்கும் புரிஞ்சுருக்கும் ....)
மீண்டும் சந்திப்போம்
ப்ரியமுடன்
PRAKHASH......
2 comments :
இந்த வகையான அனுபவங்கள் எனக்கும் உண்டு தல..தொடர்ந்து எழுதுங்க..!எழுத்தின் அளவை பெரிதாக்கினால் நலம்...வாசிப்பது இலகு :)
கண்டிப்பா மைந்தன் உங்கள் ஆதரவுக்கு நன்றி.....
Post a Comment