இசையே மொழியாய்க் கலந்துறவாடி... இசையை களமாக்கி மகிழ்ந்துறவாடும் வரிசையில் நம்மவர் படால்களும் அவ்வப்போது தனி இடம் பெற்றுச் செல்லும் அந்த வரிசையில் இடம் பெறும் நோக்கில் எம்மவர்களால் வெளியிடப்பட்டுள்ள பாடல் ஒன்றைப்பற்றிய பார்வையே இந்த வலைப்பதிவு....


"உயிரோடு வந்தாய் உணர்வைத் தின்றாய் உயிரைக்கொன்றாய் ஏனடி இன்னும் காதல் வீணடி" சிலநூறு வாத்தியங்கள் பலநூறு பணியாட்கள் எதுவுமின்றி சில மென்மையான தொழில்நுட்பங்களின் உதவியுடனும் வளங்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ள அற்புதமான இந்தப் படைப்புக்கு முதலில் இந்த நண்பனின் வாழ்த்துக்கள்....அற்புதமான இசை அழகிய வரிகள் இன்னும் பாடலுக்கு தரம் சேர்க்கும் வகையில் பொருத்தமான குரல் சேர்க்கை என்பன பாடலை மனதில் தொடர்ச்சியாக ஒலிக்க செய்கின்றன... நாங்கள் யாழ்கடந்த தமிழர்கள் தவறவிட்ட இடங்களில் உருவாக்கம்பெற்ற இந்த ஒளிச் சேர்க்கை எம்மவர் மனதில் மேலும் அவா உருவாவதற்கு காரணமாயும் அமைகின்றது...காட்சி அமைப்புக்கள் காட்சியில் அமைப்புக்கள் என்பனவும் பாடலின் தரத்தை மேலும் மெருகூட்டுகின்றன...

நிறைகள் ஒரு படைப்பாளனை மெருகூட்டுகின்றது அதுபோல் குறைகள் பகிரப்படும் போது அது அந்த படைப்பாளனை வளமாக்குகிறது என்பார்கள் அவ்வையில் இங்கே என் மனதில் பட்ட தனிப்பட்டு நான் குறை என கருதும் விடயங்களையும் பகிர்ந்துவிடுகிறேன் பாடலின் வரிகளும் காட்சியமைப்புகளும் நன்றாக இருப்பினும் சில வேளைகளில் பாடலின் வரிகள் காட்சியமைப்புகளுடன் சற்று முரண்படுகின்றன என்பது இங்கே கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்று... மேலும் இக்கால பாடல்களில் எல்லாம் ஏதோ கலப்படம் போல பிற மொழிகள் சேர்க்கப்படுவது வழமையாகி விட்டது இந்தப்பாடலிலும் அதே போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன அழகாக இருந்தாலும் அதே அழகை எம் மொழியிலும் காட்ட இயலாதா.... அதற்கு பிற மொழி அவசியமா....இவை இந்த பாடலின் மீது இருக்கும் மோகத்தை கொஞ்சம் குறைப்பதாயே எனக்கு தோன்றுகிறது... நண்பர்கள் இதை கவனிப்பின் மேலும் நன்றாக இருக்கும்....
அத்துடன் தொடர்ச்சியாக காதல் பாடல்கள் மட்டுமின்றி வேறு வகையான பாடல்களையும் நண்பர்கள் உருவாக்க வேண்டுமென்றது என் அவா....

குறைகளை கொஞ்சம் விலத்திவிட்டுப் பார்த்தால் இந்தப்பாடல் அழகிய மேகங்களின் சுகமான மழைத்தூறல்....மீண்டும் மீண்டும் நனையலாம் ... இசையின் ரகங்கள் என்றும் சுகமே.... இதிலும் நலமே.....நண்பர்களின் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் .....

மீண்டும் சந்திக்கலாம்
இப்படிக்கு
ப்ரியமுடன்
S.PRAKHASH....

2 comments :

மேலும் இக்கால பாடல்களில் எல்லாம் ஏதோ கலப்படம் போல பிற மொழிகள் சேர்க்கப்படுவது வழமையாகி விட்டது இந்தப்பாடலிலும் அதே போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன அழகாக இருந்தாலும் அதே அழகை எம் மொழியிலும் காட்ட இயலாதா.... ////// இசைக்கு மொழி இல்லைத்தோழர்........
#செந்தமிழில் பாட்டு வரவேண்டுமானால் சுந்தர மூர்த்தி நாயனாரை மறுபிறவி எடுக்க வைக்க வேண்டும்

தோழர் பிரகாஷ் எழுதியது போல பாடலின் வரிகளும் காட்சியமைப்புகளும் நன்றாக இருப்பினும் சில வேளைகளில் பாடலின் வரிகள் காட்சியமைப்புகளுடன் சற்று முரண்படத்தான் செய்கிறது
எது எப்பிடியோ பாடல் நல்லாத்தான் வந்திருக்கு

நிச்சயமாக இசைக்கு மொழி இல்லைத் தோழரே அனால் அவசியமற்று பிறமொழிகளை வேண்டுமென்றே எம்மவர் பாடலில் திணிப்பது நிச்சயமாக ஆரோக்கியமான ஒன்றல்லவே....இதனைத் தான் நான் தவிர்த்தல் நன்று என்கிறேன்.. அவசியம் ஏற்படின் நிச்சயம் பயன்படுத்தலாம்....... மேலும் உங்கள் கருத்துக்கு நன்றி தோழா....

Post a Comment

என் வலைப்பூவில்...

ஜாபகங்கள் அனுபவங்கள் கனவுகள் கனவுகளின் விதைகள் நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கும்....என்னுள் இருப்பவற்றின் சில தேடல்களும் என் கனவுகளும் இங்கே....அதைத்தாண்டி பார்த்துக் கேட்டு ரசித்தவற்றில் பிடித்தவற்றை மட்டுமல்ல வெறுத்தவைகளையும் சில நேரம் இங்கே பகிர்கிறேன்....உங்களையும் சிலது நினைவூட்டட்டும்...
Powered by Blogger.

Followers