ஹலோ ப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்பிடி இருக்கீங்க கொஞ்ச நாளா வெட்டியா இருந்தாலும் பிஸியா தானுங்க இருந்தம் அதால தான் ஒண்டும் எழுத முடியல....அப்படா கொஞ்ச நாளா நிம்மதியா இருந்தம் மறுபடி வந்துட்டாண்டா எண்டு நீங்க மனசுக்குள்ள திட்டுறது விளங்குது.....என்ன செய்ய ப்ரெண்ட்ஸ் எதெண்டாலும் வதைக்க வேண்டியது என்ட கடமை...வாங்க வேண்டியது உங்க நிலைமை நம்மளுக்குள்ள ஏன் இந்த போர்மளிட்டி எல்லாம்....ரொம்ப நாளா நானும் ஏதாவது நல்ல விசயங்கள் எழுதுவம் நாமளும் ஏதோ கொஞ்சம் சமூக அக்கறையோட
இருக்கம் எண்டு காட்டிகுவம் எண்டு எழுதினா எல்லாரும் வந்து காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சுறாங்க...அதான் மறுபடி அத விட்டிட்டு நம்ம ட்ரெண்டுகே எழுதுவம் எண்டு வந்திட்டம்....சரி சரி வாங்க அத விட்டிட்டு விசயத்தக் கவனிப்பம்...
நம்ம பசங்களுக்கெல்லாம் எதுல ஆர்வம் இருக்கோ இல்லையோ இந்த காதல் என்டா ஆர்வம் காட்டதவங்க யாருமே இருக்க முடியாதுங்க..அத பற்றி பேசுறதிளையும் அடிக்கடி பண்றதிலையும் சரி..... நாடோடிகள்ள சசிகுமாரு அண்ணாத்த சொல்லுவரே..."காதல் என்டா தெரிஞ்சவன் தெரியாதவன் எல்லாம் கைகொடுக்க வருவானெண்டு"....இப்பிடித்தான் நாமளும் ரொம்ப நல்லவங்களாச்சே அதால யாரு வந்து ஹெல்ப்பு எண்டாலும் பண்ணாம விடுறதில்ல....ஷாஜகான் படத்தில வார விஜய் அளவுக்கு இல்லாட்டியும் ஏதோ நம்மளால முடிஞ்சளவு....நம்மளால இந்த அடி உதை எல்லாம் வாங்க முடியாது பாருங்கோ அதால யாருக்காவது ஹெல்பு பண்ண போறேன்டாலும் அண்ணாத்த யாரவது பொண்ணு சைடில இருக்கங்களா எண்டு முதல பர்த்துகுவம் அதான் நம்ம கெட்டித்தனம்...இப்பிடி எல்லாம் பார்த்துப் பார்த்து ஹெல்ப் பண்ணின என்ன சொல்ல நம்ம ராசிக்கோ என்னவோ நாம ஹெல்ப் பண்ற லவ் ஒண்டு ஒழுங்க முழுசா உருப்படுறல்ல....சரி சரி அது வேற கதை அத விடுவம்..இப்படி ஹெல்ப்பன்ன போய் போய் ஊர் காதல் கதை எல்லாம் நமக்கு அத்துப்படிங்க....இப்ப நான் சொல்ல போறது நம்ம வட்டராத்தில வந்து சிக்கிக் கொண்ட சில காதலன்களை பற்றித தானுங்கோ...
நம்ம இந்த எக்ஸ்பீரியன்சு ஆரம்பிச்சது கிட்டத்தட்ட 10 ஆம் ஆண்டில...அதுக்கு முன்னாடியும் சின்ன சின்னதா இருந்துருக்கு ஆனா இதாங்க பெஸ்டு...அப்பவே ஒருத்தன் என்கூடவே வந்து வாய்ச்சான்...பொல்லாதவன் படத்தில நம்ம தனுசு தன் கதைய திருப்பி திருப்பி சொல்லுவாரே அந்த கொடும எல்லாம் எனக்கு முன்னமே நடந்துருக்கு....இருந்தாலும் மற்ற பசங்க அடிச்சு விரட்டிடுவான்களோ என்னவோ நான் தான் ஒருத்தன் அப்பக்கொப்பயா கிடைச்சுற்றன் போல என்ன உக்கார வைச்சு திணற திணற கதை சொல்லுவான்....பெயர்ல மட்டுமில்ல நண்பனுக்கு எல்லாமே "மகிழ்ச்சி" யாதன் இருந்தது...ஆனா லவ் பண்ணினா அதுட மேயிண்டனன்சு எவ்வளவு கஷ்டமெண்டு அவன்கூட பழகின பிறகு தாங்க எனக்கே புரிஞ்சது...இதுக்காக இதெல்லாம் நீ பண்ணினதே இல்லையா எண்டு கேக்காதீங்கோ நம்ம கதைக்கு அப்புறம் வருவம்....நல்லா தான் போயிட்டு இருந்திச்சு செட்டு ஆகடியும் ஆனா நம்மகிட்ட வந்து சொன்னோன்ன நாமளும் சும்மா இருக்க மாட்டமே ஐடியா என்ட பெயர்ல அள்ளி விட்டம்...நாம மட்டுமில்ல நிறைய பேரு வரைட்டி வரைட்டியா அள்ளிவிட்டங்க ஐடியாவ தான்...சும்மா இருந்த தேர நாம இழுத்து நல்லா தான் தெருவில விட்டம் ஆனா என்ன பண்ண சந்நிதி வரைக்கும் இழுக்கத்தான் முடியாம
வடம் அறுத்துக்கிச்சு......அதுக்கு பிறகு இந்த மட்டேர்ல எல்லாம் தலை போட கூட எண்டு அடக்கிற்று இருப்பனுங்க ஆனா என்னையே வந்து இழுப்பானுங்க....நிறைய விசயத்தில நிறைய நாள் ஹெல்ப் பண்ணாம நழுவியும் இறுக்கம்....
இப்பிடி தானுங்க ஒ/எல் காலத்தில
ஒருத்தநெண்டா
ஏ/எல் காலத்துல இன்னொரு பயபுள்ள வந்து சிக்கினான்....அதுக்கு முன்னாடி எல்லாம் அருத்துசா லேன் எண்டு யாரவது அட்ரெஸ் கேட்ட கொஞ்சம் ஜோசிச்சு தாங்க சொல்லுவான் ஆனா அப்புறம் அந்த லேன்ல ஒவ்வொரு செங்கல் செங்கலா ஜாபகம் வார அளவுக்கு சுத்தனமுங்க....நம்ம பசங்களுக்கு லவ் பண்றப்போ வார தைரியம் அத சொல்றபோது வாறதில்ல பாருங்கோ(அடுத்தவன் லவ் எண்டதால நாமளும் தைரியமா அட்வைசு பண்றம்)....நாம கூட போனா உசுப்பேத்தி உசுப்பேத்தியே பேச அனுப்பிடுவமுங்கோ அதால பயபுள்ள நம்மளையே எவ்வளவு பிஸி எண்டாலும் வீடு வரைக்கும் வந்தும் கூட கூட்டிப் போய் இருக்கான்....இப்பிடியெல்லாம் அளவோட
ஏ/எல் எல்லாம் முடிஞ்சு நான் ரெண்டாம் தடவை பரீட்சை எடுக்கும் மட்டும் சுத்திற்று இருந்தனுங்க...அதுக்கு பிறகு ரிசல்டு வந்த பிறகு கொஞ்ச சமாச்சரங்களால நான் போறதில்ல அத பற்றி அப்புறம் பேசுவம் அதுக்கு பிறகு அவன்கூட எவன் போனானோ தெரியல.....நல்லா வளந்து வந்த சேவல் இறச்சிக்கடைக்கு போய்டுச்சுங்க.....நல்ல காலம் இதுல கடைசி வரை நான் இல்லாததால நம்ம தலை ராசி தப்பிச்சுது....
இப்பிடியெல்லாம் ஒண்டு ரெண்டு இல்ல பத்துப்பதினைஞ்சு போயிருக்கும் இப்படியெல்லாம் அடிபட்டு அல்லல்ப்பட்டு அவமானப்பட்டு இங்கயாவது நின்மதியா இருப்பமெண்டு கம்பஸ் வந்து சேர்ந்தா இங்க கதை சொல்றதுக்கேண்டே கூட்டம் கூட்டமா வந்து சேர்ந்தானுங்க பாருங்க....ஹெல்ப்பு கேட்காடியும் நம்ம பயபுள்ளைகளுக்க ப(வ)ல்லி ப(வ)ல்லி எண்டு ஒரு நண்பரு இருக்காருங்க பயபுள்ள செம கெட்டி ப்ரெண்டு என்ட பெயர்ல பொண்ணுங்க கிட்ட பஸ் ஓட்ரதுக்கு எல்லாம் இவருகிட்ட தான் கத்துக்கணும்....அண்ணாத்த 5 வருசமா ஒரு ஒரு உயிரியல் படிக்கிற புள்ளைய டாவு அடிக்கிரருங்க...1 மாசம் டாவு அடிக்கிரவனே ஒரு நாள் பூரா வைச்சு கதை சொல்லுவான் இது உங்க வீட்டு லவ் எங்க வீட்டு லவ் இல்லங்க கொக்காமொக்கா 5 வருஷ லவ் இல்ல....நேர்ல பத்தாதுண்டு போன் பண்ணி கூட கதை சொல்லி காதுக்கடிச்ச கதைய நான் எங்க போய் சொல்லி அழ... நான் ஆனா ஒரு விசயத்தில அவரு ரொம்ப நல்லவருங்க நம்மள பற்றி தெரிஞ்சுருக்கும் போல இருக்கு அதால நம்மக்கிட்ட ஹெல்ப்பு எண்டு ஒண்டும் கேட்கல..அதால நாமளும் அப்பிடியே விட்டிட முடியாது பாருங்க கொஞ்ச நாள்ல இந்த வேலையா யாழ்ப்பாணம் போகலாமெண்டு இருக்கன்...ஆனா நண்பரு ரொம்ப உசாரு அது உசராகாட்டியும் எண்டு பலதுக்கு தண்ட போன்ல இருந்து குறுந்தகவல் போட்டு கொள்வாரு காதல் சமாச்சாரங்கள் பற்றி அப்புறம் அந்த பொண்ணுக
கேட்டா இளிச்சவாயன் நான் தானே....எப்பவுமே அவர்ட போன் நம்மகிட்ட தான் இருக்குமாம்..அவர் போன்ல இருந்து போடுறது நான்தானாம்..எப்பவாச்சு நானில்லாட்டி அவர் கூடவே பெயர சொல்ல இன்னொரு குழந்தையும் இருக்குதுங்கோ........இன்னும் அந்த குறுந்தகவல்
வாற ஜீவன்கள் இதையும் நம்புதுகள்...
ஆனா ஒன்டுங்க கம்பசுக்கு வந்து லவ் மாட்டேருகள பார்த்த போது ஒருசந்தோஷம் நாம சேர்த்து வைக்காமலே பலது தானா சேர்ந்துகுரானுங்க தானா உடைந்சுகுரானுங்க..இந்த கால லவ் எல்லாம் இப்பிடி தானம்....நம்ம ராசில மட்டும் இது டிபெண்ட் பண்ணி இல்ல எண்டு இப்ப தானுங்க புரியுது....இப்படி நிறைய இருக்குங்க சொல்றதுக்கு...ப்ரனவக்காதல் பிருந்தாவனக் காதல் எண்டெல்லாம் ஏன் மிகச் சின்னப் பொருள் என்டுவான்களே அதுக்கு ஏதோ அணு எண்டுவாங்க படிச்ச ஜாபகம் இருக்கு அதுட காதல் கதை எல்லாம் கூட இருக்குங்க ரொம்ப இண்டரஸ்டா இருக்கும் அதெல்லாம் அப்புறம் சொல்லுறன்....கொஞ்சம் வேலை இருக்குங்க நண்பன் போன் பண்றானான் ஏதோ லவ் மாட்டாராம்....அப்ப பிறகு சந்திப்பம் வரட்டே.....
இப்படிக்கு
ப்ரியமுடன்
Prakhash.....