ஏக்கங்கள் எப்போதும் ஒன்றாய் இருந்திருக்கலாம் நோக்கங்கள் எப்போதும் ஒன்றாய் அமைந்தனவா....காலங்கள் கடந்து கனவுகள் மறைந்து போன இன்றைய நிலையிலே என் மனம் அசைபோடும் நிகழ்வுகள் இவை....கடந்த சில வாரங்களில் பத்திரிகைகளில் அதிகமாக இடம்பெற்றிருந்த விடயங்களில் ஒன்று நில சுவீகரிப்பை எதிர்த்து முருகண்டி போன்ற இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு போராட்டங்களும் அவற்றின் பிற் தொடர்ச்சிகளும்.... மேலும் குடியமர்த்தப்படுவதட்காக வவுனியா முகாம்களில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்கள் மீண்டும் அங்கேயே திருப்பி அனுப்பப்பட்டமையும்......
நினைவுகளில் இருக்கும் வரை யாழ் மண்ணில் வாழ்ந்தது 2 வருடங்கள் தான்....அமைதியற்று இருந்த போதும் ஆனந்தமாய் இருந்த காலங்கள் அவை.....யுத்தத்தின் நிமிர்த்தம் இடம்பெயரல் அவ்வாறே நான் யாழ் மண்ணை விட்டு வந்த அந்த நாட்கள் இன்றும் ஜாபகமாய்.... எமது இடம் சமூகம் சமயம் கலாச்சாரம் அனைத்தையும் அங்கே விட்டு விட்டு இங்கே வந்து வாழ ஆரம்பித்த காலங்களிலும் அதற்கு பின்னாட்களிலும் கூட மண்ணின் நினைவுகள் அடிக்கடி வந்து போகும்... சொந்த வீடு வாசல் எட்டிப்பார்த்தால் வெளியே தெரியும் அழகிய கோவில் எல்லாம் விட்டு எல்லாம் விட்டு இங்கே வந்து வாடகை வீட்டில் கால்களை நீட்டினால் சுவர்முட்டும் அளவுக்கு வாழ்ந்தவர்கள் இன்னும் எமைப் போல் இங்கு நிறையவே உண்டு...ஏறத்தாள இடம்பெயறலின் பின்னலில் ஒரு 12 வருடங்கள் வரை யாழ் மண் எம் மனதிலும் சரி இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் எம்மவர்களிடமும் சரி கர்வத்துடன் எம் ஊர் என்று சொல்லும் அளவுக்கு யாழ்ப்பாணம் இருந்து வந்தது உண்மையே.... யுத்தத்தின் கொடுமையிலும் கம்பீரமாய் விளங்கிய யாழின் நிலையில் இன்று இவ்வாறான மாற்றத்துக்கு கரணம் என்ன....
அளவுக்கதிகமாக குவியும் வெளிநாட்டு உறவுகளின் பணமா.....?
ஆரம்ப காலங்களில் யாழை விட்டு இடம்பெயர்ந்து போன தம் உறவுகள் அங்கே படும் கஷ்டத்தை பொறுக்காமல் அவர்கள் தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய வேண்டும் என்ற எண்ணத்தில் அனுப்பிய உதவித் தொகைகள் இன்று எம் மக்களில் பலரை தவறான பாதைகளில் தள்ளிவிட்டிருக்கவே செய்கின்றன....இதன் நிமிர்த்தம் சில வேலைகளில் சிறு பிள்ளைகளிடம் இவ்வாறான பணத்தை பெற்றோர்கள் அளவுக்கதிகமாக புழக்கத்தில் விடுவதும் இளமைப் பராயத்திலேயே எம் சமுதாயத்தை வழிமாற்றி அழைத்துச் செல்லவும் காரணமாய் அமைகின்றன.... எந்தளவுக்கு உண்மை எண்டு தெரியவில்லை அனால் பத்திரிக்கை செய்திகள் மூலமும் இணையத்தின் மூலமும் அறிந்து கொண்ட விடயம் இக்கால யாழில் 18 வயதிலும் குறைந்த சிறார்களில் போதைப் பொருள் பாவிப்பவர்களின் விகிதம் வயது வந்தவர்களை விட அதிகமாம்... மேலும் ஆபாசப் படங்களின் புழக்கமும் யாழின் சிறுவர் சமூகத்தை சீரழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது....
வெளிநபர்களின் யாழ் வருகையா....?
யுத்தம் ஓய்ந்த நிலையில் சுற்றுலாத்துறை விருத்தி என்ற நடவடிக்கை யாழிலும் மேட்கொள்ளப்பட்டது அனைவரும் அறிந்ததே... கசோர்னா கடற்கரை கடற்கரை சாலைகள் போன்றனவும் இதற்காக திருத்தியமைக்கப் பட்டிருந்தன....இந்நிலையில் அங்கே வருகை தரும் உள்நாட்டு வெளிநாட்டு பயணிகளின் பங்கும் யாழை நிலைகுலைப்பதில் பெரும் பங்கு ஆற்றுகின்றது... புதிதாய் இவர்களுக்காய் அமைக்கப்பட்ட ஆடம்பர விடுதிகள் கேளிக்கை நிலையங்கள் பிரயாணிகள் அற்ற சந்தர்ப்பங்களில் உள்ளூர் யாழ் மக்களை குறி வைத்தும் செயற்படுவதால் யாழின் இளம் சமூகம் பாரிய சவால் ஒன்றையே எதிர் நோக்குகின்றது... இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் உரிய கவனத்தை மேட்கொண்டார்களா மேற்கொண்டு வருகிறார்களா என்று தெரியவில்லை... மேலும் இவ்வாறு வருகை தரும் சிலர் வேண்டுமென்றே யாழின் கலாச்சாரத்தை எல்லாம் சீரழிக்கும் நோக்குடன் செயற்படுவது போல் செயற்படுவதாகவும் அங்கிருப்பவர்கள் சிலர் கூறுவதும் தெரிந்ததே...
வெளிநாட்டுப் பத்திரிகைகளும் இணையங்களுமா .....?
என்னதான் நடக்கிறதோ இல்லையோ சில பத்திரிகைகளுக்கும் இணையங்களுக்கும் அதை மிகைப்படுத்தி கேவலப்படுத்துவடே வேலையாகிவிட்டது.... இப்பொழுதெல்லாம் எப்படி செய்தி எழுதுகிறார்கள்.... "யாழில் இளம் பெண் கணவனைக் கைவிட்டு கள்ளக் காதலனுடன் ஓட்டம்" , "யாழில் வெற்றிகரமாக நடைபெறும் விபச்சார சாம்ரச்சயம்" இவை எல்லாம் இணையத்தில் வெளியாகிய செய்திகளின் தலைப்புக்கள்.... நம்மவர்களும் இவ்வாறான செய்திகளைத் தானே விரும்பிப் படிப்போம் படித்துவிட்டு என்ன செய்வது அடை பற்றி 10 பேரிடம் இதைப்பற்றி சந்தோசமாய் விவாதிப்பது.... நம்மை நாம் கேவலப்படுத்திக் கொள்கிறோம் என்பதை மறந்து விட்டு....சில நாட்களுக்கு முன் இந்தியத் தமிழ்த் தொலைகாட்சி ஒன்றில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பி இருந்தார்கள் ஒரு பெண் தன் கணவனை விட்டு விட்டு இன்னுமொரு ஆடவனுடன் சேர்ந்து வாழ விரும்புவதை சொல்வதைப் பற்றி அந்தப் பெண்ணின் வயது 28 அவர் 28 வருடமாக தமிழ் நாட்டில் தான் வசிக்கிறாராம்...ஆனால் நம் துரதிஷ்டம் பிறந்தது யாழ்ப்பணத்தில்.... செய்தி என்ன தெரியுமா..."கணவனை விடுத்து வேறொரு ஆடவன் வேண்டும் என கதறி அழும் யாழ்ப்பாணத்துப் பெண்" .. பிறந்தது மட்டுமே யாழ்ப்பாணமான பெண் எப்படி முழுமையாய் யாழ்ப் பெண்ணானாள்....யாழில் இன்னும் 80% சமூகம் இதற்காய் வெட்கப்பட்டுக் கொண்டும் இன்னும் அதே பழைய வாழ்க்கையே வாழ்ந்துகொண்டு இருக்கின்றது என்பதும் நம்பிக்கை... இவ்வாறான செயற்பாடுகள் ஒட்டு மொத்த சமூகத்தையே கேவலபபடுத்துவதாய் அமைகிறது அல்லவா....
இவ்வாறு கலாச்சாரங்களில் கழிந்தும்,கழியாத போது சிலரின் கதைகளில் எமைக் கழிந்தும் போய்க் கொண்டிருந்த எம் யாழ்.. இன்று மண் என்ற நிலையிலும் சூறையாடப் படுகின்றதுவா... முருகண்டிப் போராட்டங்களும் அங்கே பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களும் வெளியில் வாழும் ஒவ்வொரு தமிழர் மத்தியிலும் இவ்வாறான சிந்தனைகளை முடுக்கி விட்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை....இடத்தில் மட்டுமின்றி இனத்திலும் கூட எமக்கு தனித்துவம் உண்டல்லவா....பல்லின மக்களையும் பல்வேறு கலாச்சாரத்தையும் பல சமூகத்தவர்களையும் கொண்ட கொழும்பு போன்ற ஒரு இடத்தில் எமக்குரிய பிரத்தியோகம் என்பது எதிர் பார்க்கப்பட முடியாது தான்... ஆனால் காலம் காலமாக எமக்கே எமக்கு என பெயர் சொல்லும் எம் மண் எப்போதும் அதே கர்வத்துடன் பெயர் சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்க்கை எம்மவர்கள் அனைவரிடமும் இருக்குமல்லவா...இவற்றை எல்லாம் தாண்டி எம்மவர்களிடையே உள்ள பிரதேச வாதங்களும் பிரிவினைகளும் கூட எம்மை மேலும் தளர்வு நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை....இவையும் இங்கே கவனிக்கப்பட வேண்டியவையே
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றான் அன்று புரட்சிக் கவி தலை நிமிரவிட்டலும் பரவாயில்லை தரணியில் வாழும் நாள்வரை தலை கவிழாமல் வாழ்ந்துவிட்டு போவோமே....
மீண்டும் சந்திக்கலாம்...
இப்படிக்கு
ப்ரியமுடன் Prakhash



3 comments :
/ ஆனால் காலம் காலமாக எமக்கே எமக்கு என பெயர் சொல்லும் எம் மண் எப்போதும் அதே கர்வத்துடன் பெயர் சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்க்கை எம்மவர்கள் அனைவரிடமும் இருக்குமல்லவா...//
நிச்சயமாக!எப்போதுமே!!
உங்கள் கவலைகள் தான் எங்களுக்கும் சகோ!
நிச்சயமாக சகோதரரே... ஒவ்வொரு தமிழனின் எதிர்பார்ப்பாயும் இது அமைய வேண்டும் என்பதே அவா....!
Post a Comment