வந்து பாருங்கண்ணா நம்ம பிழைப்பு சிரிப்பா சிரிக்குது 

வினய் நடித்த மோதி விளையாட்டில ஒரு 60% ஐயும் பிரஷாந்த் த ஸ்டார் திரைப்படத்தில ஒரு 20 % ஐயும் கலந்து அங்கால தண்ட ஒரு 20% (எனக்கு தெரியல ஒரு வேளை இந்த 20% கூட சுட்டிருக்கலாம்) கற்பனையையும் கலந்து ஜில்லா என்ட பெயர்ல நம்மள கலங்கடிச்சுருக்கரு நம்ம இளைய தளபதி.

படத்தின் கதை
மோகன்லால் வழக்கம் போல மதுரையையே ஆட்டிப்படைக்கும் ஒரு பெரிய தாதா விஜய் அவரின் மகன் கூடவே விஜய் கூட ஒரு அன்னக்கை... ஆரம்பத்தில அப்பா கூடவே இருந்து ஜாயமான பஞ்சாயத்து அடிதடிக்கு எல்லாம் போற விஜய் சின்ன வயசில இருந்தே போலீஸ் ஆக ஆசைப் படுறாரு அப்பிடியே ஒரு கட்டத்தில கஷ்டப்பட்டு போலீசும் ஆகிடுறாறு...போலீஸ் ஆனப்புறம் தான் தெரிய வருது தன் அப்பா தான் இந்தியால நடக்கிற கடத்தல் தொழிலுக்கே டான் என்று (இங்க டைரக்டர் பாஷாவ கொஞ்சம் ஜாபகப்படுத்துராப்புல)... அப்புறம் அப்பாவா திருந்திடுங்க சரணடைச்சுருங்க எண்டு கெஞ்சுற விஜய் ஒரு கட்டத்தில கடத்தல்ல ஈடுபடுற அந்த அன்னக்கைய என்ன தான் கூட இருந்திருந்தாலும் வேற வழி இன்றி  என்கவுன்ட்டர்ல போட்டுத் தள்ளிப் புடுராப்புல..

அதுக்கப்புறம் வைச்சார் பாரு டைரக்டர் ட்விஷ்ட விஜய் மோகன் லால்ட மகன் இல்ல அந்த அன்னக் கை தான் மோகன் லால்ட மகன் தண்ட வாரிச பாதுகாக்க தான் விஜய மோகன்லால் மகன் எண்டு சொல்லி வளர்த்து வரார் எண்டு "மோதி விளையாடு" படத்தின் கதைய கையில எடுக்கிறாரு டைரக்டர் .அதோட இண்டர்வல் விடுறாங்க போய் ரெஸ்ட் எடுத்துற்று வாங்க எண்டு .. (அதோட ஓடிருக்கணும் தப்புப் பன்னிற்றனே )

அப்புறம் என்ன தன் மகனை கொன்றவனை பழிவாங்க வெகுண்டேளும்பும் அண்ணாச்சி மோகன் லால் விஜய போட்டுத்தள்ள ட்ரை பண்ணுறாரு.. ஆனா விஜய் அப்பா பாசத்தில அவர போட்டுத் தள்ளாம எப்பிடி திருத்தி மறுபடி நல்ல அப்பாவா மாத்திக்கிறாரு எண்டது தாங்கோ நம்ம ஜில்லாட கதையு(இதுக்கு வேணுமெண்டா  நீங்க விஷல்ட தோரனை இல்ல ஜீவாட வந்தான் வென்றான் எண்டு எதிட காப்பி  எண்டு வேனுமேண்டலும் நினைச்சுக்கலாம் நான் பொறுப்பில்ல)... இதுக்குள்ள வழக்கம் போல விடுமுறைய கழிக்க மதுரைக்கு வார கஜால காணுராறு காதலிக்கிறாரு அப்பிடியே நாலு டூயட் பாடுறாரு இதுக்குள்ள வேற யாரோ பொண்ணோட  சாங்கு வேற...

    இருதய நோயாளிகள் கர்பிணிப் பெண்கள் இந்தப் படத்தை பார்ப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும் 

விஜய்
வழமை போல வாறாரு பஞ்சு பேசுறாரு நாற்பதுஐம்பது  பேர தூக்கி போட்டு மிதிக்கிராறு மறுபடியும் பஞ்சு டயலாக் பேசுறாரு... ஆனா மனிசன் எல்லாப் படத்தையும் விட இதில சும்மா டான்சில பிச்சு உதறி இருக்காரு அதுக்காக மட்டும் அவருக்கு ஒரு சபாஷ்

மோகன் லால்
பாவம் மலையாளத்தில சூப்பர் ஸ்டாரா கம்பீரம இருந்த மனிசன இங்க கூட்டியாந்து வில்லனாக்கி காமடி பண்ணிப் இருக்காங்க... அதுவும் அந்த கிளைமாக்ஸ்க்கு முன்னாடி அவர் பேசுற பஞ்சு டயலாக் எல்லாம் சகிக்கல

காஜல் அகர்வால்
இந்தப் படத்தில நடிக்கிறதுக்காக ஐ திங் டைரக்டர் இந்தப் பொண்ணுக்கு திருப்பாச்சி சிடிய போட்டுக் காட்டி இதுல த்ரிஷா பண்ணின வேலை தான் உனக்குமேண்டு சொல்லிருப்பரு போல எந்த நேரமும் மூலைல நிக்கிறது இல்ல கட்டிப் பிடிச்சுப் பாட்டுப் பாடுறது.அம்புட்டுட்டு தான் நம்ம காஜல்ட சீனு....

இமான்
பாட்டுகளும் பாக் ரவுண் மியூசிக்கும் நல்லா தான்  போட்டிருக்கீங்க ஆனா அதை எல்லாம் கொண்டுவந்து ஏன் இந்தப் படத்துக்கு போட்டீங்க...

நேசன்
வாய்யா வா....இவ்வளவு காலம் என்கையா இருந்தா உன்னதான் எல்லாரும் ஊர்ல தேடிற்று இருக்கானுக... உங்கள் சேவை இளைய தளபதிக்கு தேவை..
கடைசியில எனக்கு இது தான் மிஞ்சிச்சு...


மொத்தத்தில் ஜில்லா விஜய்க்கு மற்றுமொரு சுறா.....

இப்படிக்கு 

ப்ரியமுடன் Prakhash

3 comments :

///பாட்டுகளும் பாக் ரவுண் மியூசிக்கும் நல்லா தான் போட்டிருக்கீங்க ஆனா அதை எல்லாம் கொண்டுவந்து ஏன் இந்தப் படத்துக்கு போட்டீங்க.../// சூப்பர் ஜீ ஜீ அசத்திப்புட்டீங்க

(அதோட ஓடிருக்கணும் தப்புப் பன்னிற்றனே )

ஏன்டா தே மவனே இதுக்கு எண்டே ஒரு பிளாக் ஓபன் பண்ணியா நீ

Post a Comment

என் வலைப்பூவில்...

ஜாபகங்கள் அனுபவங்கள் கனவுகள் கனவுகளின் விதைகள் நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கும்....என்னுள் இருப்பவற்றின் சில தேடல்களும் என் கனவுகளும் இங்கே....அதைத்தாண்டி பார்த்துக் கேட்டு ரசித்தவற்றில் பிடித்தவற்றை மட்டுமல்ல வெறுத்தவைகளையும் சில நேரம் இங்கே பகிர்கிறேன்....உங்களையும் சிலது நினைவூட்டட்டும்...
Powered by Blogger.

Followers